ஆட்சியில் அமர்த்தினால் நாடு என்ன ஆகும்?
தமிழக மூதறிஞர் குழுக் கூட்டத்தில் மணிசங்கர அய்யர் எம்.பி. எழுப்பிய வினா
சென்னை
பெரியார் திடலுக்கு வருகை தந்த மணிசங்கர அய்யர் தமிழர் தலைவருக்கு பிறந்த
நாள் வாழ்த்துகூறி பயனாடை அணிவித்தார். (சென்னை - 6.12.2013)
சென்னை, டிச.7- தேர்தலில் நின்று வெற்றி
பெற்று இட்லர் 12 ஆண்டுகள் ஜெர் மனியை ஆண்டான் - படாதபாடுபடுத் தினான்
அன்று. இப்பொழுது நான் ஒரு இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு மோடி
புறப்பட்டுள்ளார். அவரை ஆட்சியில் அமர வைத்தால் நாடு எந்த கதிக்கு ஆளாகும்?
என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார் மணி சங்கர அய்யர் எம்.பி.,
சென்னை பெரியார் திடல் - நடிகவேள்
எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று நடை பெற்ற தமிழக மூதறிஞர் குழுக்
கூட்டத்தில் மதச் சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள் என்னும் தலைப்பில்
உரையாற்று கையில் மணி சங்கர அய்யர் எம்.பி. அவர்கள் குறிப்பிட்டதாவது:
மயிலாடுதுறையில் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அந்தத் தொகுதியில், நாத்திகனான நான், மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளேன்.நான் ஒரு நாத்திகன் மணிசங்கர் அய்யர் அதிரடி
நண்பர்களோடு கோயிலுக்குச் சென்றுள் ளேன்.
அவர்களின் வற்புறுத்தலால்; நண்பர் களுக்கு அது கடவுளாகப் பட்டது. எனக்கோ
அது வெறும் கல்லாகத்தான் தெரிந்தது.
மத ஆட்சி நடைபெறும் நாடுகளில்...
சில நாடுகளில் ஒரு மத ஆட்சி நடைபெறுகிறது.
ஆனாலும் அங்கெல்லாம் அமைதிக்குப் பதில் அமளி தான் நடந்து கொண்டு இருக்
கிறது - பாகிஸ்தானில் ஒரு மதத்துக் குப் பல பிரிவுகள் - மோதல்கள் நடந்து
கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. மதச்
சார்பற்ற தன்மையை சட்ட ரீதியாக நாம் ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். அதனால்
நிம்மதியாக இருக்கிறோம். இங்கு பிஜேபியோ இந்து மதஆட்சியைக் கொண்டு வரத்
துடிக்கிறது.
மூதறிஞர்
குழு கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த மணிசங்கர அய்யருக்கு தமிழர் தலைவர்
பயனாடை அணிவித்தார். நீதியரசர் மோகன், இயக்க நூல்களை வழங்கினார். உடன்
வரியியல் அறிஞர் ச. ராஜரத்தினம் உள்ளார். (சென்னை - 6.12.2013)
இந்தியா தப்பித்தது - ஏன்?
இந்தியாவில் 85 சதவீத மக்கள் இந்துக்கள்,
15 சதவீத மக்கள் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள். மதச் சார்பின்மையை நாம்
கடைப் பிடிப்பதால் பிரச்சினைகள் ஏதும் இல்லை.
நாடு சுதந்திரம் அடைந்த நிலையில்
இந்தியாவில் உள்ள முசுலிம்கள் விரும்பினால் பாகிஸ்தான் சென்று விடலாம்;
இந்தியாவிலேயே தங்கி இருக்க விரும்பினால் தாராளமாகத் தங்கிக் கொள்ளலாம்
என்று கூறப் பட்டது. சென்றவர்களும் உண்டு; இந்தியா விலேயே தங்கியவர்களும்
உண்டு. அத்தகைய முசுலிம்கள் மீது சந்தேகப் படலாமா? அப்படி சந்தேகப்படுவது
சரியா? நியாயமா?
ராமன் கோயில் கட்டுவோம் என்று பிஜேபி
சொல்லுகிறது. கட்டுங்கள் - யார் வேண்டாம் என்று சொன்னது? பாபர் மசூதியை
இடித்து விட்டு அந்த இடத்தில்தான் ராமன் கோயிலைக் கட்ட வேண்டுமா? என்
பதுதான் பிரச்சினை. கோயில் கட் டுவதாக இருந்தால் மயிலாடுதுறை வாருங்கள்
அங்கு ஏற்கனவே 38 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.
ராமன் அயோத்தியில்தான் பிறந்தானா?
ராமன் அயோத்தியில் தான் பிறந்தான்
என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? தசரதனுக்குப் பத்தா யிரம்
மனைவிமார்களாம் பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல ராமன் அயோத்தியில்
பிறந்தான் என்று சொல்லலாமா?
10ஆம் நூற்றாண்டில் கஜினி முகம்மது சோமநாத
புரத்தில் இருந்த சிவன் கோயிலைக் கொள்ளை அடித்தான் என்பதற்காக 1200
ஆண்டுகளுக்குப்பின் சோமநாத புரத்தை மய்யப்படுத்தி, அத்வானி அங்கிருந்து ரத
யாத்திரை சென்றார் என்றால் அதன் பொருள் என்ன? மக்களை மத ரீதியாகத்
தூண்டுவது தானே?
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி யின்
பிறந்தநாள் அன்று இராமேசு வரத்தில் தொடங்கி பைசாபாத் வரை யாத்திரை ஒன்றை
மேற் கொண் டேன்; என்னோடு பத்து பன்னி ரெண்டு நண்பர்கள் வந்தனர். நவம் பர்
14ஆம் தேதியோடு நேரு பிறந்த நாளில் எங்கள் யாத்திரை நிறை வுற்றது.
பைசாபாத் சென்றபோது என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அமைதி தேடி
போன எனக்குச் சிறை. கரசேவை என்ற பெயரால், பாபர் மசூதியை இடிக்கப்
போனவர்களையல்லவா தடுத்திருக்க வேண்டும்?
உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதம் என்னாயிற்று?
உத்தரப்பிரதேச முதல் அமைச்சர்
(கல்யாண்சிங்) உச்சநீதிமன்றத் திலேயே உத்தரவாதம் கொடுத்தார் நாங்கள்
கரசேவைதான் செய்யப் போகிறோம்; பாபர் மசூதியைத் தொட மாட்டோம் என்றார் -
சொன்னபடி நாணயமாக நடந்து கொண்டார்களா? பாபர் மசூதியை இடித்தவர்கள், குழந்தை
ராமன் சிலையை மீண்டும் அங்கு கொண்டு வந்து வைத்தார்கள்; அதனைத்
தடுத்திருக்க வேண்டாமா?
இந்து நேஷனலிஸ்ட் பிரதமர் ஆனால் நாட்டின் நிலை என்ன?
பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடி
நிறுத்தப்பட்டுள் ளார். அவர் தன்னை இந்து நேஷன லிஸ்ட்டு என்று தெரிவித்துக்
கொள் கிறார். அப்படியானால் இந்துக்கள் அல்லாதாரின் நிலை என்ன?
நான் அத்வானியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன்.
இந்தியா என்பது 100 சதவீதம் இந்தியாவா? 85 சதவீதம் உள்ள மக்களுக்கான இந்தியாவா? என்று கேட்டேன் - இதுவரை பதில் இல்லை.
பாகிஸ்தான் பிரியாமல் இருந் திருந்தால்
இந்தியாவில் 50 கோடி முசுலிம்கள் இருந்திருப்பார்கள். அப் பொழுது இவர்கள்,
இந்து ராஜ்ஜியம் பற்றிப் பேசியிருப்பார்களா?
வாக்கு வங்கி அரசியலா?
வாக்கு வங்கி அரசியலா?
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக,
வாய்ப்புக்காகப் பேசி னால் ஓட்பேங்க் என்று முத்திரை குத்துகிறார்கள்,
அவர்கள் ராமன் கோயில் கட்டுவேன் என்கிறார்களே அது மட்டும் ஓட்பேங்க்
இல்லையா?
தென் மாநிலங்களைவிட, வட மாநிலங்களில்
வாழும் முசுலீம்கள் வறுமையில் வாடிக் கொண்டு இருக் கிறார்கள். போதிய கல்வி
வளர்ச்சியும் இல்லை. அவர்கள் வளர்ச்சி அடைய வேண்டாமா? இந்தியாவின்
அடையாளத்துக்கே ஆபத்து!
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.
இப்பொழுது நம்முன் உள்ள பிரச்சினை 2014இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற
தேர்தலில் மதச் சார்பின்மை காப்பாற்றப்பட வேண் டுமா? வேண்டாமா? என்பதுதான்
பிரச்சினை. இந்தியாவின் அடையா ளத்துக்கே இப்பொழுது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அறைகூவல் ஏற்பட் டுள்ளது இந்தக் கூட்டத்தின் பொருளே தலைப்பே இதுதான்.
நாடே தோற்றுப் போக வேண் டுமா என்பதுதான் முக்கிய கேள்வி.
இட்லரும் - நரேந்திரமோடியும்
தேர்தலில் வெற்றி பெற்றுத்தான் இட்லர்
ஆட்சிக்கு வந்தான். 12 ஆண்டு கள் நாட்டை ஆண்டான். மக்கள் என்ன
பாடுபட்டார்கள்? அதே ஆபத்து இந்தியாவுக்கும் வர வேண்டுமா?
நான் நினைத்துக்கூடப் பார்க்க வில்லை பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத் தலைவரிடமிருந்து இங்குப் பேசிட எனக்கும் ஓர் அழைப்பு வரும் என்று. இப்படிப் பட்ட ஒரு புகழ் எனக்கு இதுவரை கிடைத்ததில்லை. வாய்ப்புக்கு நன்றி என்று பேசினார் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர அய்யர்.
நான் நினைத்துக்கூடப் பார்க்க வில்லை பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத் தலைவரிடமிருந்து இங்குப் பேசிட எனக்கும் ஓர் அழைப்பு வரும் என்று. இப்படிப் பட்ட ஒரு புகழ் எனக்கு இதுவரை கிடைத்ததில்லை. வாய்ப்புக்கு நன்றி என்று பேசினார் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர அய்யர்.
தமிழர் தலைவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து
தமிழக மூதறிஞர் குழு சார்பில் நேற்று
நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு மணி சங்கர
அய்யர் எம்.பி. அவர்களும், நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த உச்சநீதிமன்ற
முன்னாள் நீதிபதி எஸ். மோகன் அவர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி
சால்வை அணிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக