சனி, 7 டிசம்பர், 2013

இந்தியாவின் கடும் எதிர்ப்பால் உலக வர்த்தக மாநாடு தோல்வி

பாலி:உலக வர்த்தக மாநாட்டில் வேளாண் உற்பத்தி பொருட்கள் வர்த்தகத்துக்கு இந்தியாவை தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மாநாடு படுதோல்வி அடைந்தது.உலக வர்த்தக கூட்டமைப்பு கடந்த 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து உலக வர்த்தக விதிமுறைகள் குறித்து விவாதித்து வருகின்றனர். ஆனால், ஒரு முறை கூட மிகப் பெரிய அளவில் ஒருங்கிணைந்த ஒப்பந்தம் எதையும் நிறைவேற்ற இயலவில்லை. இந்நிலையில் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் உலக வர்த்த அமைப்பு உறுப்பு நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் 159 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் ஆதரவோடு உலக வர்த்தக கழகம், வேளாண் உற்பத்தி பொருட்கள் குறித்த உலக அளவிலான வர்த்தக உடன்படிக்கைக்கான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், மாநாட்டில் உலக அளவில் வேளாண் பொருட்களை வர்த்தகம் செய்ய, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் தங்களது நாட்டில் விவசாயத்துக்கான மானியத்தை 10 சதவீதத்துக்கு மேல் வழங்க கூடாதுÕ என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா சார்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா பேசுகையில், Ôவிவசாயிகளுக்கு 10 சதவீதத்துக்கு மேல் மானியம் அளிக்க கூடாது என்று எங்களை கட்டுப்படுத்த முடியாது. இதனால் வேளாண் உற்பத்தி பாதிக்கும்Õ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்தியாவின் கருத்தை லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக கியூபா, பொலிவியா, வெனிசூலா, நிகரகுவா உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. இதனால் ஒப்பந்தம் நிறைவேறவில்லை. மாநாடு படுதோல்வியில் முடிந்தது. .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: