திங்கள், 9 டிசம்பர், 2013

30 மந்திரிகள், 80 கோடி ! இருந்தும் DMK இவ்வளவு வோட்டு வாங்கினது பெரிய விஷயம்

சென்னை: குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, அ.தி.மு.க., அமைச்சர், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டுக்கு ஆளான, முதல்வர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்' என, குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, முதல்வரிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம், "நோட்டீஸ்'அனுப்பியது. இதற்கு, முதல்வர் எழுத்து மூலம் பதில் அளித்தார். "இந்த பதிலை ஏற்கமுடியாது' என, அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், "எதிர்காலத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்' என, கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை, முதல்வர் இரண்டாவது முறையாகப் பெறுகிறார்.
இதுபோல, தி.மு.க., ஆட்சியில் நடந்திருந்தால், "உடனடியாக பதவி விலக வேண்டும்' என, ஜெயலலிதா கோரியிருப்பார். ஆனால், நான் அப்படி கேட்கவில்லை. ஆனால், சில குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, அ.தி.மு.க., அமைச்சர், கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்போது முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். அவர் மீது என்ன நடவடிக்கை என, கட்சியில் கேட்கின்றனர். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
dinamalar.com

கருத்துகள் இல்லை: