சனி, 14 டிசம்பர், 2013

தனியார் மூலம் கணினி மயமாகும் அரசு ஆவணங்கள்: ரகசியம் பறிபோகும் அபாயம்

அரசு ஆவணங்களை, தனியார் மூலம், கணினி மயமாக்கும் திட்டத்தால், அரசின் முக்கியமான ரகசிய தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசின், அனைத்து துறைகளின் அன்றாட செயல்பாடு மற்றும் திட்டங்களை கணினி மயமாக்கும், மின் ஆளுமை திட்டம், தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.  பாதுகாப்பில் எந்த பிரச்னையும் கிடையாது. இவைகளை பின்பற்றினால் : 1. Data Encryption / தகவல் மறையாக்கம், அது நிச்சயம் மென்பொருள் வல்லுனர்கள் செய்திருப்பார்கள்/செய்வார்கள் 2. அரசு ஊழியர்களை அந்த வேலையில் இருந்து முடிந்தவரை தவிர்ப்பது. 3. தனியாரிடம் இருந்து பணிக்கு வரும் நபர்களின் அலைபேசி, வெளி தொடர்பு சாதனங்கள், கேமரா, Data Cards - இவைகளை உள்ளே அனுமதிக்க கூடாது. லாக்கரில் பூட்டி வைத்து டோக்கன் கொடுத்துவிட வேண்டும். வீட்டுக்கு செல்லும் பொது, டோக்கனை பெற்று சாதனங்களை திரும்ப கொடுக்க வேண்டும். 3. பனி செய்யும் இடத்தில், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் வேலை செய்யும் அளவிற்கு ஒவ்வொருவரின் Cubicle அமைக்க படவேண்டும். 4. பனி செய்யும் ஒருவருக்கு இன்றைக்கு செய்த பனி, நாளைக்கு தொடர கூடாது. Shuffle செய்ய வேண்டும். 5. ஒவ்வொரு கணினியிலும் Local Storage கூடாது. Thin Client Server Storage Concept பின்பற்ற வேண்டும். அதுவும் 5 நாட்களுக்கு தான். 6. 5 நாட்கள் இறுதியில் Cloud Storage யில் தகவல்களை சேமிக்கவேண்டும். 6. கண்காணிப்பு கேமரா ஒவ்வொரு cubicle க்கு இருந்தால் மிக நல்லது. 7. பணியாளர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், நிச்சயம் வாக்காளர் அட்டை வைத்திருக்க வேண்டும். \\\\ மின் ஆளுமை திட்டம் என்பது நிச்சயம் தேவை. அப்போது தான் ஆவணங்கள், தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும், எத்தனை வருடம் ஆனாலும் கிடைக்கும் எதையும் எரிக்க முடியாது.
'உள்ளாட்சி துறைகளின் சேவைகள் மற்றும் ஆவணங்களை, மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு, காலக்கெடுவை யும் நிர்ணயித்துள்ளது.இக்காலக்கெடுவுக்குள், மின் ஆளுமை செய்யவில்லை எனில், உள்ளாட்சி துறைக்கான, மத்திய அரசின் ஒதுக்கீட்டைப் பெறுவதில், சிக்கல் ஏற்படும். இந்நிலையில், தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற தனியாரிடம், ஆலோசனை திட்ட உதவி பெற, அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து, 'ஹேகத்தான்' என்ற நகர்ப்புற உள்ளாட்சி குறியீடு கருத்தரங்கை, நகராட்சி நிர்வாக ஆணையரகம், நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்துகிறது. இதற்கிடையே, அனைத்து அரசுத் துறைகளின் ஆவணங்களை, கணினி மயமாக்க, அனுபவமுள்ள தனியார் கணினி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை, 'எல்காட்' நிறுவனம் கோரியுள்ளது.
இதில், பணி விவரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களிடம், கையால் பராமரிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் உள்ளன. இவற்றை எலக்ட்ரானிக் ஆவணங்களாக மாற்ற வேண்டும். இதற்கென சிறப்பு மென்பொருளுடன், அகர வரிசையில் ஆவணப்படுத்த வேண்டும். சில ஆவணங்களை எலக்ட்ரானிக் ஆவணங்களாக மாற்றும் போது, புகைப்படங்கள், வரைபடங்களையும் சேர்க்க வேண்டும். இதற்கான, மென்பொருளும் தேவைப்படுகிறது.அனுபவம் மிக்க பணியாளர்களுடன், தனியார் நிறுவனங்கள் இப்பணியை செய்து முடிக்க வேண்டும். தவறுகள் இன்றி செய்யப்படும் பணிக்கு, சிறப்பு விருது அளிக்கப்படும். அரசின் அனைத்துப் பணிகளையும், மின் ஆளுமையில் கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், அரசு ஆவணங்களை எலக்ட்ரானிக் ஆவணங்களாக மாற்றுவது கட்டாயமாகியுள்ளது. இப்பணிக்கு, அரசு அலுவலகங்களில் உள்ள, அடிப்படை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத சில நேரங்களில், பணியை மேற்கொள்ளும் நிறுவனமும், அடிப்படை வசதிகளை அளிக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களையும், கண்காணிப்பாளர்களையும் நியமிக்க வேண்டும். குறித்த காலத்தில், பணியை செய்து முடிக்க வேண்டும். காலக்கெடு பற்றிய விவரம், பணி ஆணையில் தெரிவிக்கப்படும். இதற்கான, விண்ணப்பத்தை, 'எல்காட்' நிர்வாக இயக்குனருக்கு, இம்மாதம், 26ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு, டெண்டரில் கூறப்பட்டுள்ளது. அரசுத் துறை மற்றும் நிறுவனங்களின் ஆவணங்களை, தனியாரைக் கொண்டு, எலக்ட்ரானிக் ஆவணங்களாக மாற்றும் போது, முக்கியமான ரகசிய ஆவணங்கள், தனியார் வசம் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால், அரசுக்கு, பெரும் நெருக்கடி ஏற்படும் என, அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுத் துறை ஆவணங்களை, எலக்ட்ரானிக் ஆவணங்களாக மாற்றினால் மட்டுமே, எதிர்காலத்தில் பாதுகாக்க முடியும். இல்லையேல், எந்த ஆவணத்தையம் எதிர்காலத்துக்கு அளிக்க முடியாது.
>அரசு ஊழியர்கள் மூலம், இப்பணியை செய்வது கடினம். மேலும், கணினி அறிவு பெற்றவர்கள் மட்டுமே, இப்பணியை செய்யமுடிம். எனவே, தனியாருக்கு இப்பணி அளிக்கப்படுகிறது. நம்பிக்கையுடன் தான் பணிகள் அளிக்கப்படுகிறது. மேலும், தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும். ராணுவத்தில் கூட, தொலைத் தொடர்பு பணிகள் தனியாரிடம் தான் அளிக்கப்படுகிறது. எனவே, உரிய பாதுகாப்பும், உத்தரவாதமும், இப்பணிக்கு அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.கம 

கருத்துகள் இல்லை: