இவருக்கு, உ.பி., மாநிலத்தின், குறிப்பிட்ட சில பகுதிகளில், செல்வாக்கு உண்டு. சமாஜ்வாதி கட்சிக்கு, இவர், ஆதரவு அளித்தார். இதனால், இவரை, உணவுத் துறை அமைச்சராக்கினார், அகிலேஷ் யாதவ். கடந்த மார்ச் மாதம், பிரதாப்கார் என்ற இடத்தில், கலவரம் வெடித்தது. இதை அடக்குவதற்காக சென்ற, போலீஸ் அதிகாரி ஜியா உல் ஹக், கொலை செய்யப்பட்டார். ராஜா பைய்யா தான், இந்த கொலைக்கான சதித் திட்டத்தை தீட்டியதாக புகார் கூறப்பட்டது. சிபிஐ சொல்லிட்டா சரியாக தான் இருக்கும், இவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இருக்காதே?
இவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., ராஜா பைய்யாவுக்கும், இந்த வழக்கிற்கும், சம்பந்தம் இல்லை என, அறிக்கை அளித்தது. இதையடுத்து, லக்னோவில், கவர்னர் மாளிகையில், நேற்று நடந்த விழாவில், உ.பி., அமைச்சராக, ராஜா பைய்யா, மீண்டும் பதவியேற்றார். முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர், இதில் பங்கேற்றனர் dinamalar,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக