டெல்லி அரசியலில் எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 43 சதவீதத்தினர்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் மொத்தமுள்ளவர்களில் 3ல் 2 பங்கு பேர் கோடீஸ்வரர்கள் என்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்.) ஆய்வு முடிவில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் 5 மாநில தேர்தல் நடைபெறுகிறது. அவற்றில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஆய்வு ஒன்றை ஏ.டி.ஆர். அமைப்பு மேற்கொண்டது.
இதில், டெல்லி மாநிலத்தில் 43 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன என தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசம் 25 சதவீதத்தினருடன் 2வது இடத்திலும், ராஜஸ்தான் 16 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளது. இதே போன்று கோடீஸ்வரர்களாக உள்ள எம்.எல்.ஏ.க்கள் குறித்த ஆய்வில் டெல்லி 69 சதவீதத்தினருக்கு குறையாமல் உள்ளது.
ராஜஸ்தான் 46 சதவீதத்தினருடன் 2வது இடத்திலும், மத்திய பிரதேசம் 38 சதவீதத்தினருடன் 3வது இடத்திலும் உள்ளது.
ஆய்வுக்கு உட்பட்டவர்கள் கடந்த 2008ம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். டெல்லி அரசியலில் பாரதீய ஜனதா கட்சியினரில் 46 சதவிதத்தினர் மீதும, காங்கிரஸ் கட்சியினரில் 38 சதவீதத்தினர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக