அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனா. 55 வயதாகும் இவர்
அமெரிக்காவில் இருந்து வெளியரும் நாளிதழில் தன்னைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:–
முதன் முறையாக நியூயார்க்குக்கு வந்தபோது 35 அமெரிக்க டாலர் பணத்துடன்தான் வந்தேன். அதை வைத்து மிகப்பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது.
நியூயார்க் நகருக்கு வந்து தங்கியிருந்தபோது முதல் வருடத்தில் கத்தி முனையில் நான் கற்பழிக்கப்பட்டேன். என் முதுகில் துப்பாக்கியை வைத்து மிரட்டி இழுத்து சென்று கற்பழித்தனர்.
அதன்பின்னர் எனது வீட்டில் 3 முறை கொள்ளை சம்பவம் நடந்தது. என்னிடம் இருந்த ரேடியோவைகூட கொள்ளையடித்து சென்றனர். அது ஏன் நடந்தது என எனக்கு தெரியவில்லை.
நான் துணிச்சல் மிக்கவள். அது எனது உடலில் பாரம்பரியமாகவே உள்ளது என நினைக்கிறேன். எனவே, வாழ்க்கையில் முன்னேற கடுமையாக போராடினேன். எனது அறையில் படுக்கையில் படத்தபடி விரக்தியுடன் சுவரை பார்த்தபடி இருப்பேன். ஜன்னல் வழியாக பார்க்கும்போது புறாக்கள் தங்கள் கவலைகளை மறந்து பறந்து திரியும்.
அவற்றை பார்த்த பின்னர் எனக்குள் புத்துணர்வு ஏற்பட்டு நானும் என் கவலைகளை மறந்து மகிழ்ச்சியான நிலைக்கு மாறுவேன். எனது வாழ்க்கை போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று அதில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக