புதன், 9 அக்டோபர், 2013

‘கடவுளின் துகள்கள்’ கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் விருது

ஸ்டாக்ஹோம் : பூமி உட்பட கிரகங்கள் எல்லாம் பல லட்சம் ஆண்டுகளுக்கு  முன் உருவாவதற்கு காரணம் ‘கடவுளின் துகள்கள்’  தான்  என்று உலகுக்கு சொன்ன பிரபல விஞ்ஞானிகள் இரண்டு பேருக்கு இயற்பியலுக்கான நோபல் விருது அளிக்கப்படுகிறது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி பிரான்காய்ஸ் யெங்க்லர்ட்; பிரசல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர். பிரிட்டனை சேர்ந்தவர் பீட்டர் ஹிக்ஸ். எடின்பரோ பல்கலைக்கழக ஆராய்ச்சி நிபுணர் கடந்தாண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரப் பகுதியில் விஞ்ஞானிகள் சேர்ந்து பிரமாண்ட அணுத்துகள்களை ‘கொல்லீடர்’ என்ற ராட்சத குழாயில் மிக அசுர வேகத்தில் மோத விட்டு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அணுத்துகள்கள் இப்படி மோதியதால் தான் பூமி உட்பட பிரபஞ்சத்தில் கிரகங்கள் தோன்றின என்பதை உலகுக்கு உறுதி செய்தனர்.


இந்த கண்டுபிடிப்புக்கு முதன்முதலில் காரணமானவர்கள் தான் பீட்டர் ஹிக்ஸ் மற்றும் யெங்க்லர்ட். கடந்த 1964ல் யெங்க்லர்ட் மற்றும் அவர் நண்பர் ராபர்ட் பிரவுட் சேர்ந்து ‘கடவுளின் துகள்கள்’ மூலம் தான் பிரபஞ்சம் உண்டானது என்பதை வெளிப்படுத்தினர்.  ஆனால்,  அந்த ஆராய்ச்சி முழுமை பெறவில்லை.   இவர் வெளியிட்ட சில வாரங்களில் பீட்டர் ஹிக்ஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார். அவரும் கடவுளின் துகள் என்பதை சொல்லி, அதன்மூலம் தான் உலகம் உண்டானது; கிரகங்கள் உருவாகியிருக்க வேண்டும் என்றார்.

இவர்கள் இருவரின் ஆய்வு முடிவுகளின் படி, கடந்தாண்டு விஞ்ஞானிகள் கூட்டாக சுவிட்சர்லாந்தில் ஆய்வு மேற்கொண்டு உலகுக்கு ‘கடவுளின் துகள்கள்’ பற்றி நிரூபித்தனர். இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதன் மூலம், மேரி கியூரி, ஆல்பர்ட் ஈன்ஸ்டின் வரிசையில் சேர்ந்துள்ளனர்.

கடந்தாண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த செர்கி ஹரோகி, அமெரிக்காவை சேர்ந்த டேவிட் வைன்லேண்ட் ஆகியோருக்கு கம்ப்யூட்டர் உருவாவதற்கான இயற்பியல் ஆராய்ச்சி  முடிவுகளை வெளியிட்டிருந்தனர். விஞ்ஞானிகள் ஹிக்ஸ், யெங்க்லர்ட் இருவருக்கும் வரும் 11 ம் தேதி சுவீடனில் நடக்கும் விழாவில் நோபல் விருது அளிக்கப்படும்.

எக்ஸ்ட்ரா தகவல்

பிரபல விஞ்ஞானி ஆல்ப்ரட் நோபல் நினைவாக நோபல் விருது ஒவ்வொரு  ஆண்டும் நார்வேயில் உள்ள நோபல் அகாடமி மூலம் அளிக்கப்படுகிறது. ரொக்கப்பரிசு
7 கோடியே 20 லட்சம் மற்றும் தங்க மெடல், பாராட்டிதழ் அளிக்கப்படும். - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=64906#sthash.RZixnGUB.dpuf

கருத்துகள் இல்லை: