பாரிஸ்
: ஏழையாக இருந்தால் போதும், ஏழை நாட்டை சேர்ந்தவராக
இருந்தால் போதும், கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம். என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை தான். பணம், வசதி இருந்தால் போதும், 90 வயது வரை வாழலாம் என்று தான் இத்தனை ஆண்டு காலமாக பேசப்பட்டு வருகிறது. இது போல பணக்கார நாடாக இருந்தால் வாழ்நாளும் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மரபு நம்பிக்கையை தகர்க்கிறது நெதர்லாந்து நிபுணர்கள் ஆய்வு முடிவு. நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது.
இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை நெருங்க முடியாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் பணக்காரர்கள் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதே சமயம், ஏழைகள் பலரும் 90 வயதை தாண்டி வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தகவல், இந்த ஆராய்ச்சி குழுவுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. 1950 ல் இருந்து 2008 வரை அமெரிக்கா, பிரிட்டன் , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட 19 நாடுகளில் உள்ள இறப்பு சதவீதம் 70 , 74 வயதுள்ளவர்கள் 0.45 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.
இதேபோல, இந்தியா போன்ற வேறு சில மொத்த உற்பத்தி திறன் சதவீதம் குறைவாக உள்ள வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களில் இதே வயதினர் இறப்பு சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, 90 வயது வரை வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இப்படி வாழ்நாள், முதுமை விஷயங்களில் ஆராய்ச்சி செய்த நிபுணர்களுக்கு , நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வாழ்நாள் நீடிப்பு ஆகிய இரண்டும் எந்த வகையில் ஒத்துப்போகின்றன. வாழ்நாளை ஒரு நாட்டின் உற்பத்தி திறன் எந்த வகையில் முடிவு செய்கிறது என்பதற்கு மட்டும் உறுதியான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை; இது தொடர்பாக ஆராய்ச்சி நீடிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக