ஆதரவு கேட்டு கலைஞர் கடிதம்: விஜயகாந்த் ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பார்: சந்திரகுமார் பேட்டி
ஈரோடு
கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சி
தொடக்கப்பள்ளியில் ஈரோடு எம்.எல்.ஏ நிதியில் இருந்து ரு. 11 லட்சம் செலவில்
சத்துணவு கூடம் கட்டப்பட்டு உள்ளது.
இதன்
திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் சந்திரகுமார் எம்.எல்.ஏ
கலந்துகொண்டு சத்துணவு கூடத்தை திறந்து வைத்தார். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதாவுடன் கூட்டணியா? என்பது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி தொண்டர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பார்.
ஏற்காடு
இடைத்தேர்லில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்படி தி.மு.க. தலைவர் கலைஞர்
அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து விஜயகாந்த்
ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தாது மணல், ஆற்று மணல்கொள்ளை பற்றி தான் பேசினாரே தவிர எந்த சமுதாயத்தை பற்றியும் அவர் பேசவில்லை.
தே.மு.தி.க.
எம்.எல்.ஏக்களை சஸ்பெண்டு செய்ததால் மக்கள் பணி செய்ய முடியாமல்
போய்விட்டது. இந்த 6 மாத காலத்தில் எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்ட பணிகளை
கூட பார்வையிட எங்களை அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக