சனி, 12 அக்டோபர், 2013

காங்கிரசுக்கு திமுகவின் அல்டிமேட்டம் ! கூட்டு குழு கூட்டத்திற்கு ராஜாவை அழைக்காதது அரசியல் உள்நோக்கமே !

'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், முக்கிய சாட்சியான ராஜாவை, அழைக்காமல்
விட்டதற்கு, அரசியல் உள்நோக்கமே காரணம். இதற்கு மேல், இப்போதைக்கு எதையும் கூற விரும்ப வில்லை' என்று பார்லிமென்ட் கூட்டுக் குழுவில், தி.மு.க., தன், எதிர்ப்பு அறிக்கையை, பதிவு செய்துள்ளது.
சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக்குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை நடத்தி, இறுதி அறிக்கையை தயாரித்து, முடித்துள்ளது. கூட்டுக் குழுவின் கடைசி கூட்டத்தில், இந்த அறிக்கை வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டும், உள்ளது. முக்கிய கட்சிகள் பலவும், இந்த அறிக்கைக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விஷயத்தில், தி.மு.க., சார்பிலும், கூட்டுக்குழுவிடம், எதிர்ப்பு அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கூட்டுக்குழு அமைக்கப்பட்டதில் இருந்தே, முக்கிய சாட்சியான ராஜாவை, அழைத்து விசாரிக்க வேண்டுமென்று, பல கட்சிகளும் கேட்டன. ஆனால், இந்த கோரிக்கை, கடைசி வரை ஏற்கபடவில்லை. ராஜாவை அழைத்து, வாக்குமூலம் பதிவு செய்ய, கால அவகாசம் இல்லை என்றும், காரணம் கூறப்பட்டது. இது, முற்றிலும் ஏற்க முடியாத வாதம். கூட்டுக்குழுவின் காலக் கெடுவை, நீட்டித்துக் கொடுக்கும்படி கேட்டபோதெல்லாம், பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கி, காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டே வந்தது. எனவே, காலஅவகாசம் இல்லை என்பது, சொதப்பலான காரணம். இந்த விவகாரத்தில், முக்கியமான, பிரதான சாட்சியே, ராஜா தான். முக்கிய சாட்சியான அவரை விசாரிக்காமல் விட்டது, தவறு. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலான வாகனவதியை அழைத்து, வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்குமூலத்தில், ராஜாவின் மீது, சில குற்றச்சாட்டுகளையும், அவர் வைத்தார். இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காவது, ராஜாவை அழைத்திருக்க வேண்டும். அதுவும், செய்யவில்லை. இதற்கு, அரசியல் உள்நோக்கமே, காரணம். இதனால், மத்திய அரசுக்குத்தான், பாதிப்பு உண்டாகியுள்ளது. எனவே, இப்போதைக்கு, இதற்கு மேல், எதுவும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அந்த எதிர்ப்பு அறிக்கையில், தி.மு.க., கூறியுள்ளது. ராசாவை கூப்பிட்டா பிரதமரையும், சிதம்பரத்தையும் வம்புக்கு இழுப்பார்.
-dinamalar.com 

கருத்துகள் இல்லை: