நெல்லை: தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும்
தீவிரவாதிகள் மற்றும் கூலிப்படையினர் செல்போன்கள் மூலம் சதி திட்டங்களை அரங்கேற்றுவதாக உளவு துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பெருகி வரும் குற்ற செயல்கள் தொடர்பாக உளவு துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பெரும்பாலான சதி திட்டங்கள் சிறையில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் கூலிப்படை மூலம் தீட்டப்படுவதாகவும், செல்போன்கள் மூலம் வெளியில் உள்ள தங்களது கூட்டாளிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பி த்து சதியை அரங்கேற்றுவதும் தெரிய வந்தது.மேலும் முக்கிய கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன்கள், சிம்கார்டு கள், கஞ்சா, சிறிய கத்திகள் தாராளமாக புழங்குகின்றன.
வெளியில் இருந்து இவை கடத்தப்பட்டு அவர்களது கைகளுக்கு எளிதில் கிடைத்து விடுகிறது. இதற்கு உடந்தையாக பல மத்திய சிறை காவலர்கள் செயல்படுகின்றனர். இதுபற்றி அறிந்தும் சில ஜெயிலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் ப ல்வேறு குற்றச் செயல்கள் எளிதில் நடப்பதாக உளவு துறை நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஒரு போலீஸ் உயரதிகாரியிடம் கேட்ட போது, ‘கைது செய்யப்படும் பயங்கர குற்றவாளிகள் மத்திய சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். அப்போது சிறு குற்றங்கள் செய்து விட்டு சிறைக்கு வரும் நபர்களிடம் ஆசை வார்த்தை மற்றும் மத கோட்பாடுகளை அடிக்கடி கூறி அவர்களின் மூளையை மழுங்கடித்து குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டி விடுகின்றனர்.
தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியில் வரும் அவர்கள் பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் சிறைக்குள் இருக்கும் தாதாக்கள் செல்போன்கள் மூலம் இடும் கட்டளைகளை இவர்கள் செயல்படுத்துகின்றனர். எனவே அனைத்து மத்திய சிறைகளி லும் செல்போன்கள் புழக்கத்தை முழுமையாக தடுக்க நவீன ஜாமர் கருவிகளை உடனே பொருத்த வேண்டும். சிறைகளில் செயல்படாமல் உள்ள ஸ்கேனர் கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவற்றை செயல்படுத்தினால் மட்டுமே குற்றச்செயல்களை பெரு மளவு குறைக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறைகளில் 500 செல்போன்கள்?
மத்திய சிறைகளில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 900 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது சுமார் 500 செல்போன்கள் புழக்கத்தில் உள்ளதாக உளவு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான தகவல்கள் மற்றும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகள் குறித்து சிறை நிர்வாகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்துவது இல்லை. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் அதே பிரிவை சேர்ந்த சாதாரண குற்றவாளிகளின் அறைகளில் கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக எவ்வித சோதனையும் நடத்தியது இல்லை என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக