புதன், 9 அக்டோபர், 2013

காஞ்சி சங்கராச்சாரிக்கு ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதிலும் சங்கரராமன் கொலையிலும் தொடர்பு உண்டு

சங்கரராமன் படுகொலை மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதில் சங்கராச்சாரியாருக்குத் தொடர்பு உண்டு
கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மகன் சாட்சியம்
எனது தந்தையார் சங்கர ராமன் கொலை செய்யப் பட்டதிலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக் கப்பட்டதிலும் காஞ்சி புரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வ திக்குத் தொடர்பு உண்டு என்று படுகொலை செய் யப்பட்ட சங்கரராமனின் மகன் ஆனந்த சர்மா சென்னை செஷன்ஸ்  நீதிமன்றத்தில் தெளி வாக சாட்சி சொன்னார்.
ஜெயேந்திரர் ஆள் வைத்து தாக்கினார் என்று ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கரராமன் மகன் சாட்சியம் அளித்தார்.

2002 செப்டம்பர் 20ஆம் தேதி மந்தை வெளியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவ ரது மனைவி, வேலைக் காரர் ஆகியோர் தாக் கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், லட்சுமணன் உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் தனர். இந்த வழக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ளது.
ராதாகிருஷ்ணன் அவரது மனைவி உள் ளிட்ட 17 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று (7.10.2013) 5ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பு இந்த வழக்கு விசார ணைக்கு வந்தது. சங்கர ராமனின் மகன் ஆனந்த் சர்மா ஆஜராகி சாட்சி அளித்தார். அவ ரிடம் அரசு சிறப்பு வழக் குரைஞர் என். விஜயராஜ் விசாரணை நடத்தினார். ஆனந்த் சர்மா அளித்த சாட்சியம் வருமாறு:
எனது தந்தை சங்கர ராமன் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பணி செய்து வந்தார். அதேபோல் ராதாகிருஷ்ணனும் திருப்பணி செய்து வந்தார். இதனால் இரு வருக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், 2001இல் ஜெயேந்திரர் சீனாவுக்குப் போக முடிவு செய்தபோது, எனது தந்தை எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால், எனது தந்தைக்கும், ஜெயேந்திர ருக்கும் பகை இருந்தது. எனது தந்தை காஞ்சி மடத்தில் நடக்கும் பிரச் சினைகள், தவறுகள் குறித்து அடிக்கடி கண் டித்து வந்தார். இதை யடுத்து, 2002இல் நசரத் பேட்டையில் உள்ள வெங்கடேஸ்வரா ஆயுர் வேத கல்லூரியில் எனது தந்தை, ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் ஆகி யோரை வரச்சொல்லி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற் படவில்லை.
இதையடுத்து, சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் மடத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி எனது தந்தை கடிதம் எழுதி னார். அதை மடத்தின் அபிமானிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப் பினார். நான்தான் அந்த அஞ்சல்களை அனுப் புவேன். அந்த கடிதங் களை ரிசர்வ் வங்கி வைத்தியநாதன், ராதா கிருஷ்ணன், பாம்பே சங்கர், டெக்கான் சுப் பிரமணியம், ஆடிட்டர் சங்கர், ரிக்வேதி வைத் தியநாதன் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பப் பட்டன.
இந்த நேரத்தில்தான் மந்தைவெளியில் உள்ள வீட்டில் ராதாகிருஷ் ணன் தாக்கப்பட்டார். சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் கடிதம் எழுதியது ராதாகிருஷ் ணன்தான் என்று நினைத்து அவரை ஜெயேந்திரர் ஆள்வைத்து தாக்கியுள் ளார். இதையறிந்த எனது தந்தை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதனுக்கு போன் செய்தார். போனில், கடிதத்தை ராதாகிருஷ் ணன் எழுதியதாக தவ றாக புரிந்துகொண்டு அவரை தாக்கியுள்ளனர் என்று பேசினார்.
இதையடுத்து, நானும் எனது அம்மாவும் கடி தம் எழுத வேண்டாம் என்று எனது தந்தை யிடம் கூறினோம். அத னால் 6 மாதங்கள் கடி தம் எழுதாமலிருந்தார். தாக்கப்பட்ட ராதா கிருஷ்ணன் பட்டினப் பாக்கம் காவல் நிலை யத்தில், கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால், நான் எழுதியதாக நினைத்து என்னை ஆள்வைத்து தாக்கியுள்ளனர்.
எனக் கும் எனது குடும்பத் தினருக்கும் ஆபத்து வந் தால் அதற்கு ஜெயேந் திரர்தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜசுவாமி தேவஸ்தான அலுவல கத்தில் எனது தந்தையை கொலை செய்தனர். காவல்துறையினர் விசாரித்த போது நடந்த சம்பவங்களைத் தெரி வித்தேன்.இவ்வாறு சாட்சியம் அளித்தார்.
விசாரணை முடிந்தவு டன், சாட்சி ஆனந்த் சர்மாவிடம் வேறொரு நாள் குறுக்கு விசாரணை நடத்துமாறு நீதிபதி யிடம் ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வெங்கட்ராமன் கோரி னார். அதற்கு அரசு சிறப்பு வழக்குரைஞர் கடும் எதிர்ப்பு தெரி வித்தார். இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், காலதாமதம் செய்தால் சாட்சியை மிரட்டு வதற்கு வாய்ப்பு ஏற் படும். முடிந்தால் நாளை குறுக்குவிசாரணை நடத்தட்டும் என்றார்.
ஆனால், ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் ஏற்கெனவே சாட்சியம் அளித்த ராதாகிருஷ் ணனிடம் குறுக்கு விசா ரணை நடத்தியபிறகு தான் ஆனந்த் சர்மா விடம் குறுக்கு விசா ரணை நடத்துவோம் என்று கூறி ஒரு மனு வைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, விசா ரணையை நீதிபதி வரும் 22ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அன்று ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார்.

கருத்துகள் இல்லை: