லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன்
தங்கப் புதையல் இருப்பதாக வெளியான தகவலால் தொல்லியல்துறை அங்கு ஆய்வு நடத்த
முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் கேடா என்ற கிராமத்தில் ராஜா ராவ்
ராம் பாக்சிங் என்ற மன்னர் வசித்த கோட்டை இருக்கிறது. அவர் இந்திய
விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்.
தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள்
இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில்
ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். ஆனால்
இதை யாரும் நம்பத் தயாரில்லை. இருப்பினும் மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ்
மகத்திடம் தமது கனவை சொல்லி அவரை நம்ப வைத்துள்ளார்.
மத்திய அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து தொல்லியல் துறை, ஆயிரம் டன் தங்கப்
புதையலை தேடும் பணியை தொடங்க உள்ளது. வரும் 18-ந் தேதி முதல் இப்பணி
மேற்கொள்ளப்பட இருக்கிறது
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக