புதுடெல்லி:
2ஜி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை ஆவணங்களை
வெளியிட்டதால், நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பதவியிலிருந்து பி.சி.
சாக்கோவை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள திமுக, அவருக்கு எதிராக
உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளத
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும்,
நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, 2ஜி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற
கூட்டுக் குழு விசாரணை ஆவணங்களை வெளியிட்ட பி.சி. சாக்கோவுக்கு எதிராக
தங்கள் கட்சி சார்பில் சபாநாயகர் மீரா குமாரிடம் உரிமை மீறல் நோட்டீஸ்
கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை
இழந்துவிட்டதால், கூட்டுக் குழு தலைவர் பதவியிலிருந்து சாக்கோவை நீக்க
வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் திமுக சார்பில் டி.ஆர். பாலு மற்றும்
அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர்
இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையில், 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தவறேதும் செய்யவில்லை என்றும், இவ்விவகாரத்தில் பிரதமரை அப்போதைய மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா தவறாக வழிநடத்தினார் என்று கூறப்பட்டிருந்தது. < இந்த அறிக்கை ஊடகங்களுக்கு ரகசியமாக கசியவிடப்பட்டது என்பதும், அந்த அறிக்கையை திமுக நிராகரித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக