செவ்வாய், 23 ஏப்ரல், 2013

விருதுநகர் ஆட்சியர் அலுவலக ஆபாசக் கூத்துக்கள்.. கொலை.. தற்கொலைகள்.

கையில் மனுவோடு வருகின்ற இளம் பெண்களைக் குறி வைத்து தன் வலையில் வீழ்த்தியிருக்கிறான் இங்கு டி.ஆர்.ஓ. அலுவலக டிரைவராகப் பணியாற்றி வந்த மனோகரன். இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதே வக்கிர புத்தியுடன் இருக்கின்ற அதிகாரிகளுக்கும் இவனது லீலைகள் தெரிந்துதான் இருந்திருக்கின்றன. அவர்கள் இவனிடம்  ‘பங்கு’ கேட்டிருக்கின்றனர்.  ஆட்சியர் அலுவலக வேலையை முடித்துக் கொடுப்பதற்கு பிரதிபலனாக  அவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  விருந்தாக்கி வந்திருக்கிறான். கடந்த மார்ச் 13-ஆம் தேதி காணாமல் போனான் மனோகரன். மறுநாளே மனோகரனின் மனைவி திருச்செல்வி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போதுதான், கிடைக்கப்பெற்ற செல்போன் அழைப்பு விபரங்கள் மூலம் மனோகரனின் பெண் தொடர்புகளை அறிந்திருக்கின்றனர். மனோகரன் வசிக்கின்ற இந்திரா நகர் ஏரியாவிலேயே பெட்டிக் கடை வைத்திருக்கின்ற ஆறுமுகத்தின் மனைவி பாண்டிச்செல்வி.  இவள்தான் மனோகரனுடன் கடைசியாக  செல்போனில் பேசியிருக்கிறாள். இந்த விபரங்களை அறிந்த காக்கிகள், பாண்டிச்செல்வியிடமும் ஆறுமுகத்திடமும் விசாரித்தனர்.   இந்த விசாரணை நெருக்கடிக்கு பயந்து ஆறுமுகமும் பாண்டிச்செல்வியும் தற்கொலை செய்து கொண்டார்கள்.


மனோகரனின் மனைவி திருச்செல்வி போட்ட கேபியஸ் கார்பஸுக்கு பதில் சொல்வதற்காக விசாரணையை முடுக்கியது போலீஸ்.   மனோகரனையும் தேடியது. ஆறுமுகமும் அவன் தம்பி செல்வமும் பாண்டிச்செல்வி மூலம் செல்போனில்  பேசி மனோகரனை சிவரக்கோட்டைக்கு  அழைத்து வந்து பேசியதை முதற்கட்ட விசாரனையில் தெரிந்து கொண்டார்கள். அடுத்தடுத்து விசாரணையில் உக்கிரம் காட்டிய போது, உண்மையைக் கக்கியிருக்கிறான் செல்வம்..

“ஆமாங்கய்யா.. எங்க அண்ணி இப்படித் தப்பான வழியில போயிட்டாங்கன்னு அண்ணன் ரொம்ப வருத்தப்பட்டு அழுதாரு.. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு மனோகரனை அவன் ரூட்லயே போயி.. சிவரக்கோட்டைக்கு கூட்டியாந்து பிராந்தியில தூக்க மாத்திரைய கலந்து கொடுத்தோம். அவன் மயங்கிட்டான்.. அப்புறம் அவனை அடிச்சே கொன்னோம்.. சாக்கு மூட்டைல பிணத்த கட்டி… கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ல இருக்கிற கிணத்துல போட்டுட்டோம்.. போலீஸு விசாரிச்சதும்.. அண்ணனும் அண்ணியும் பயந்து தற்கொலை பண்ணிக்கிட்டாங்க..” என்று வாக்குமூலம் தந்திருக்கிறான். செல்வம் கை காட்டிய  கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் இருந்த மனோகரனின் சடலத்தை மீட்டிருக்கிறது காவல்துறை.

ஒரு கொலை இரண்டு தற்கொலை என மூன்று உயிர்களைப் பறித்து விட்டது இந்தக் கள்ளக்காதல் விவகாரம்,  மனோகரனோடு  பெண்களைப் பங்கு போட்ட அதிகாரிகளின் வயிற்றிலும் புளியைக் கரைத்துக்  கொண்டிருக்கிறது .nakkheeran.i

கருத்துகள் இல்லை: