அதிருப்தியில் கருணாநிதி?
திமுகவின் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலினை முன்மொழிவேன் என்று
அறிவித்தாலும் அண்மைக்காலமாக ஸ்டாலின் அதிரடியாக எடுத்து வரும் முடிவுகளை
கருணாநிதி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.மு.க.ஸ்டாலினை தலைவராக
வழிமொழிவேன் என்று கருணாநிதி அறிவித்தார்;ஆனால் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத குஷ்பு இதை எதிர்த்து பேட்டி
கொடுத்தார். அப்போதே ஸ்டாலின் உக்கிரம் காட்டினார். இதனால் குஷ்புவும்
அவரது வீடும் தாக்குதலுக்குள்ளானது. குஷ்புவுக்கு எதிராக செயல்பட்டோர் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி எச்சரித்தார். ஆனால் இதை
ஸ்டாலின் தடுத்துவிட்டார்.இதைத் தொடர்ந்து கனிமொழி திருவள்ளூர்,
விழுப்புரம் மாவட்டங்களில் தனியே கூட்டம் நடத்த முயற்சித்தார்.
கனிமொழியின் தனி ஆவர்த்தனத்தை ஸ்டாலின் ரசிக்கவில்லை. இதனால் இந்த இரண்டு
நிகழ்ச்சிகளும் ரத்து ஆனது. இதைத் தொடர்ந்து மதுரைக்குப் போன கனிமொழி,
அண்ணன் மு.க. அழகிரியுடன் கரம் கோர்த்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர்
மதுரைக்கு சென்றார் மு.க. ஸ்டாலின். அப்போது அழகிரியை நேரில் சந்தித்துப்
பேசுமாறு கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் இதை ஸ்டாலின் விரும்பாமல்
மதுரையில் ஹோட்டல் அறை புக் செய்யப்பட்டிருந்தும் அதை ரத்து செய்துவிட்டு
ராமநாதபுரம் போனார். அதே
போல் ஸ்டாலினுடன் தாம் பேச விரும்பவில்லை என்பதை வெளிக்காட்டும் விதமாக
அழகிரியும் வழக்கத்துக்கு மாறாக அன்றைய தினம் வீட்டில் இல்லாமல் திடீரென
கட்சி நிர்வாகிகளை சந்திக்கக் கிளம்பிவிட்டார்.
இருப்பினும் தாம் நினைத்தபடி அழகிரியை ஸ்டாலின் சந்தித்து பேசவில்லை என்கிற
வருத்தம் கருணாநிதிக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.இதேபோல் இலங்கைத்
தமிழர் பிரச்சனையை முன்வைத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்து
திமுக வெளியேறியதற்கும் ஸ்டாலின் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று
கூறப்பட்டது. இதன் பின்னர் அண்மைக்காலமாக காங்கிரஸுடன் கூட்டணியே இல்லை
என்று அதிரடியாக ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் பேசிவருகிறார். ஆனால் இதை
கருணாநிதி விரும்பவில்லை என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
தேமுதிக அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தாக வேண்டிய நிலையில்
திமுக இருக்கிறது. லோக்சபா தேர்தல் நேரத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை
விஸ்வரூபமெடுக்காமல் போனால் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம்.. ஆனால் இதை
தடுக்கும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று கருணாநிதி
வருத்தப்பட்டதாகவும் அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உள்மோதலின் உச்சகட்டமாகத்தான் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு
எம்.ஜி.ஆர் பெயரை சூடடும் அரசின் முடிவில் ஸ்டாலினும் கருணாநிதியும்
இருவேறு நிலை எடுத்தாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. சட்டசபையில்
எம்.ஜி.ஆர். பெயரை சூட்டும் அரசின் தீர்மானத்தை திமுக ஆதரித்தது. ஆனால்
காமராஜர் பெயர் இருட்டடிப்பு செய்யப்படும்..
இதனால் நாடார்கள் வாக்கு நமக்கு கிடைக்காமல் போய்விடும் என்று
கருணாநிதியிடம் கனிமொழி கொந்தளித்திருக்கிறார்.. இதை ஏற்றுக் கொண்ட
கருணாநிதி சட்டசபையில் திமுக மேற்கொண்ட முடிவுக்கு மாறாக எம்.ஜி.ஆர். பெயரை
சூட்டினால் குழப்பம் வரும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.
மு.க.ஸ்டாலினனின் விஸ்வரூபத்தை தாம் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தவே
இப்படி ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார் என்கின்றன அறிவாலய
வட்டாரங்கள்.
இந்த அதிருப்தியின் அடுத்த கட்டமாக திமுகவில் என்ன பிரளயம் உருவாகப்போகிறதோ என்று வருத்தத்தில் இருக்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்! எந்த வித பகுத்தறிவு திராவிட கொள்கைகளும் அற்று வெறும் ஜால்ராக்களை வைத்து காங்கிரஸ் அல்லது அதிமுக பாணியிலேயே அரசியல் நடத்தி வரும் ஸ்டாலின் தமிழகத்தின் இன்னுமொரு போதாத காலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக