வியாழன், 25 ஏப்ரல், 2013

பார்வதி ஓமனக்குட்டன் வடிவேலுவுடன் ஜோடி!

அஜித் கதாநாயகி வடிவேலுவுடன் ஜோடி!நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையுலகில் ரீஎண்ட்ரி கொடுக்கிறார் நடிகர் வடிவேலு. தனது ரீஎண்ட்ரி மிகப்பெரிய அளவில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பொறுமையாக ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறார் வடிவேலு. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணன் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகையை தான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்ப்ந்தம் செய்தது திரையுலகத்தையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்துவிட்டது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா ll திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பார்வதி ஓமனக்குட்டன்.பில்லா ll எதிர்பார்த்த வெற்றியை தரவில்லையென்றாலும், பில்லா ll-ல் பார்வதி ஓமனக்குட்டனின் கதாபாத்திரம் அதிகமாக பேசப்படவில்லை. எனவே தமிழ்த் திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக இல்லை.அவ்வப்போது கடை திறப்பு விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு வந்த பார்வதி ஓமனக்குட்டன் வடிவேலு நடிக்கவிருக்கும் ‘கஜ புஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ண தேவராயரும்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்

கருத்துகள் இல்லை: