செவ்வாய், 23 ஏப்ரல், 2013

ஹிந்தி படவுலகில் தமிழ் பட ஸ்டன்ட் மாஸ்டர்கள் முற்றாக நீக்கம்! தகராறு முற்றியது

மும்பை: பாலிவுட் கலைஞர்களுடன் ஏற்பட்ட மோதலால் இந்தி
படங்களிலிருந்து கோலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் நீக்கப்பட்டனர்.
சல்மான்கான் நடிக்கும் இந்தி படம் ‘மென்டல்‘. இப்படத்தில் பெப்சி அமைப்பை சேர்ந்த 50 சதவீத ஸ்டன்ட் கலைஞர்களை பயன்படுத்தவில்லை, பாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவான சம்பளம் வழங்கவில்லை என்பதை கண்டித்து பெப்சியினர் ஷூட்டிங்கை புறக்கணித்தனர். இதையடுத்து இரு படவுலகுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பெப்சி நிர்வாகிகள் மும்பை சென்று நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இது பற்றி மென¢டல் பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சோஹைல் கான் (சல்மானின் தம்பி) கூறும்போது,‘தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர் இப்படத்துக்கு நியமிக்கப்பட்டார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கான்பெடரேஷன் விதிப்படி 70 சதவீதம் ஸ்டன்ட் கலைஞர்களை தங்கள் அமைப்பிலிருந்து பயன்படுத்த வேண்டும், 30 சதவீதம் வேறு கலைஞர்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் அமைப்பிலிருந்து 50 சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும் என்று பெப்சியினர் ஷூட்டிங்கை புறக்கணித்துவிட்டனர்‘ என்றார். மும்பை ஸ்டன்ட் சங்க பொதுச் செயலாளர் அயிஜாஸ் குலாப் கூறும்போது,‘அகில இந்திய கான்பெடரேஷன் அமைப்பின் விதியை பின்பற்றாமல் நடந்துகொண்டால் அவர்களை பாலிவுட் தயாரிப்பாளர்கள் புறக்கணிப்பார்கள்‘ என்றார்.


இதற்கிடையில் சில தயாரிப்பாளர்கள் தென்னிந்திய ஸ்டன்ட் மாஸ்டர்களை தங்கள் படத்திலிருந்து நீக்கி விட்டு பாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்களை நியமித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்பிரச்னையால் 12 நாட்களாக ஷூட்டிங் தடைபட்டிருப்பதுடன் சல்மான் கான் படத்துக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பாலிவுட் தரப்பில¢ கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: