திங்கள், 22 ஏப்ரல், 2013

திமுகவை நினைச்சு தனக்கு தானே ஆப்பு வைத்த காங்கிரஸ் ! சாக்கோ ராசாவுக்கு சால்ஜாப்பு


திமுகாவை தொலைக்கிறேன் பேர்வழி என்று புறப்பட்ட கழுத்தறுப்பு காங்கிரஸ் ,  வரலாறு காணாத ஊழல் என்று மெகா விளம்பரம் கொடுத்து அனைத்து இந்தியாவிலும் ரிலீஸ் செய்த 2 ஜி அலைகற்று விஸ்வரூபம் கடைசியில் காங்கிரசை தமிழ்நாட்டில் அடியோடு துடைத்து எறிந்ததுதான் மிச்சம் . இதை  ரொம்பவும் லேட்டாக புரிந்து கொண்டு  இப்போது எப்படி அதை கைகழுவுவது என்று தெரியாமல் ராசாவின் தலைமேல் போட்டு உடைக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது  மத்திய அரசு ,
புதுடெல்லி: 2 ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்
குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ஏன் அழைக்கவில்லை என்பது குறித்து கூட்டுக் குழுத் தலைவர் பி.சி. சாக்கோ விளக்கம் அளித்துள்ளார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க, தனக்கு அனுமதி அளிக்கும்படி முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தலைவர் சாக்கோவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக ராசாவுக்கு சாக்கோ, எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆ.ராசாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்ற கூட்டு குழு உறுப்பினர்களின் கருத்துப்படியே முடிவு எடுக்கப்பட்டதாக சாக்கோ தெரிவித்துள்ளார். கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் சிலர் மட்டுமே ராசாவை விசாரணைக்கு அழைக்க ஆதரவு தெரிவித்ததாகவும், பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றும் சாக்கோ விளக்கியுள்ளார். பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுப்படியே, ஆ.ராசாவை நேரில் அழைக்கவில்லை என்றும், இந்த விஷயத்தில் நாடாளுமன்ற குழுக்களின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் ராசாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சாக்கோ குறிப்பிட்டுள்ளார்.< கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளின் படியே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை உறுதியுடன் தெரிவிப்பதாகவும் சாக்கோ கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: