சனி, 27 ஏப்ரல், 2013

தாம்பத்தியம் பாதிக்காது ! கு க செய்யும் ஆண்களுக்கு பிரசாரம்

கோவை: குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டால் ஆண்மை
வாசக்டமி செய்துகொள்ள ஆண்கள் முன்வரும் போதிலும் டாக்டர்கள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்தது. ஆண்கள் கு.க.வில் அலட்சியம் காட்டியதாக கோவை மாவட்டத்தில் 4 டாக்டர்கள் உள்பட மாநிலம் முழுவதும் 45 டாக்டர்களுக்கு நடவடிக்கை நோட்டீஸ் (17பி) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மாநில அளவில் 69,600 ஆண்களுக்கு வாசக்டமி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:குழந்தை பெற்ற பெண்கள் பலர் உடல்ரீதியாக பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதைவிட ஆண்களுக்கு கு.க. ஆபரேஷன் செய்வது எளிதானது. பக்க விளைவுகள் கிடையாது. ‘ஆண்மை இழந்துவிடுவோம். குடும்பத்தை காப்பாற்ற உழைக்க முடியாது’ என்று ஆண்கள் பலர் பயப்படுகின்றனர். இது  உண்மையல்ல. தாம்பத்ய சுகத்துக்கோ, உடல் உழைப்புக்கோ குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆண்களுக்கு அதிகளவில் கு.க. ஆபரேஷன் செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது
குறைபாடு ஏற்படும். உடல் உழைப்பு பாதிக்கப்படும் என்ற தவறான கருத்து நிலவுவதால் தமிழகத்தில் கு.க. செய்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த ஆண்டில் 69 ஆயிரம் ஆண்களுக்கு கு.க. ஆபரேஷன் செய்ய தமிழக சுகாதார துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.தமிழகத்தில் 17 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 63 அரசு மருத்துவமனைகள், 8706 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு 10  லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன்  செய்யப்பட்டது. 980 ஆண்களுக்கு மட்டுமே ‘வாசக்டமி’ என்ற கு.க ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. ‘ஆண்மை குறைபாடு ஏற்படும். பணிபுரிவது உள்பட அன்றாட செயல்பாடுகளில் சிக்கல்கள் ஏற்படும்’ என்று கருதி ஆண்கள் பலர் வாசக்டமி ஆபரேஷன் செய்துகொள்ள முன்வருவதில்லை.

கருத்துகள் இல்லை: