ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஸ்டாலின் மீது கலைஞர் கடும் அதிருப்தி ! காங்கிரஸ் இல்லையேல் bjp யுடனா கூட்டணி வைக்க முடியும் ?

 எப்படியாவது கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதே அவரது செயல்பாடுகள்.. ஸ்டாலினிடம் எந்த ஒரு தனிப்பட்ட திறமையும் இல்லை கட்சியை அவர் வழிநடத்துவார் என்பதெல்லாம் ஓர் மாயையே.
  கொள்கை பேசும் கட்சிக்காரர்களையே ஓரங்கட்டி, திமுகவில் சுயநலப் பேர்வழிகளைக் கொண்டு கோஷ்டி அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலினால் இன்றையக் கூட்டணி அரசியலில் அனைவரையும் அரவணைத்து செல்ல உரிய தகுதியை வளர்த்துக் கொள்ள இயலவே இயலாது ... எந்தப் பிரச்சனையிலும் உடனுக்குடன் முடிவெடுக்கும் ஆற்றலும், சமயோசித புத்தியும் கிடையாது ... அவர்கள் கட்சிக் கொள்கைகளிலேயே அவருக்கு முழுமையான தெளிவு கிடையாது ... வைகோவை எதிர்த்து அரசியல் செய்து ஸ்டாலின் தோற்று ... ஸ்டாலின் வைகோ பிரச்னையை கருணா வைகோ பிரச்சனையாக கருணா மாற்றியதால் தான் வைகோவை வெளியேற்றிவிட்டு ஸ்டாலின் தமிழ் நாடு முழுவதும் சுற்ற முடிகிறது ... எனவே கருணாநிதி இல்லையேல் அரசியலில் ஸ்டாலினுக்கு இறங்குமுகம் நிச்சயம் ...
தன்னிச்சையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சும், கட்சிக்கு சாதகமாக அமையாமல், பாதகத்தை உருவாக்குவதால், அவர் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் மதுரைக்கு சென்ற ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேச வேண்டும் என, கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்காமல், அழகிரியை சந்திக்காமல், மதுரை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பினார்.தன் பேச்சை ஸ்டாலின் கேட்கவில்லை என்ற ஆதங்கம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என, ஸ்டாலின் பேசியதும், கருணாநிதிக்கு கூடுதல் அதிருப்தியை அளித்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், பா.ஜ.,வுடன் - தி.மு.க., கூட்டணி வைக்க முடியுமா? எதற்காக ஸ்டாலின் இப்படி பேச வேண்டும்.
லோக்சபா தேர்தலில், இலங்கை தமிழர் பிரச்னை விஸ்வரூபம் எடுக்காமல் இருந்தால், மதவாத சக்தியை முறியடிப்பதற்கு, காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, காங்கிரசை ஏன் வீணாக பகைத்துக் கொள்ள வேண்டும். கூட்டணிக் கதவை மூடி வைக்க வேண்டிய அவசியமில்லை என, தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு, எம்.ஜி.ஆர்., பெயரைச் சூட்ட வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, தி.மு.க., தரப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் அத்தீர்மானத்தை வரவேற்றதும், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. உடனடியாக, "மறைந்த தலைவர்களுக்கு மாசு கற்பித்தல் கூடாது' என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதால் குழப்பம் ஏற்படும் என்ற அறிக்கையை கருணாநிதி வெளியிட்டார்.

தே.மு.தி.க., உடன் கூட்டணியும் எதிர்காலத்தில் உருவாகவில்லை என்றால், காங்கிரஸ் கூட்டணியும் கைவிட்டு விட்டால், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருணாநிதி தரப்பு கருதுகிறது.சட்டசபையில், சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதற்கு, ஸ்டாலின் வரவேற்றதும், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. காமராஜரை ஆதரிப்பதால், தென் மாவட்டங்களில் காமராஜர் மீது அன்பு கொண்டவர்களின் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்கும். ஆனால், எம்.ஜி.ஆரை ஆதரிப்பதால், தி.மு.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை என, கருணாநிதி தரப்பு கருதுகிறது. அதனால் தான், தன்னிச்சையாக ஸ்டாலின் எடுக்கிற சில முடிவுகள், கட்சிக்கு பாதகமாக அமைகின்றன. எனவே, அவர் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்க வேண்டும். அனைவரையும் ஸ்டாலின் அரவணைத்து செல்லும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும் என, தனக்கு நெருக்கமானவர்களிடம் கருணாநிதி ஆதங்கப்பட்டுள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நமது நிருபர்-

கருத்துகள் இல்லை: