வினவு,
இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
எங்க அம்மா உருளைக்கிழங்கு-முட்டை கறி செஞ்சிருந்தாங்க, எனக்கு உருளைக் கிழங்கு முட்டை கறி பிடிக்காது. சாப்பிடாமல் என் பிரெண்ட் அலி வீட்டுக்குப் போனேன். “ஏ ஹே, ஏ ஹே, எங்க அம்மா செஞ்சா உருளைக்கிழங்கு-முட்டே, ஏ ஹே, ஏ ஹே எனக்குப் பிடிக்காது உருளைக்கிழங்கு-முட்டே” என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்ததைக் கேட்ட அலி, அதை ஒரு பாடலாக எடுக்கலாம் என்று சொன்னான், அப்படிப் பிறந்ததுதான் இந்த பாட்டு’பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த தன்யால் மாலிக் என்ற பொருளாதாரத் துறை ஊழியர் எழுதிய பாடல் வரிகளை, உள்ளூர் தொலைக்காட்சியில் வேலை செய்யும் அலி அப்தாப் பாட, 15 வயது ஹம்சா மாலிக் கிடார் இசைக்க உருவான ‘மேரி மா நே பகாயி ஆலூ அண்டே’ என்ற பாடல் பாகிஸ்தானைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.
‘மானங்கெட்ட படை’ என்று பெயர் சூட்டிக் கொண்ட இவர்கள் பாகிஸ்தான் சமூகத்தின் மானத்தைக் காப்பாற்ற கொடி பிடிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் படைகளுக்கு மத்தியில் மானமின்மையைத் தூக்கிப் பிடிக்க யாராவது வேண்டுமே என்று ‘மானங்கெட்ட படை’ இசைக் குழுவை உருவாக்கியதாக சொல்கிறார்கள்.
நாளிதழ்களில் முதல் பக்க செய்திகள் வெளியிடவும், தொலைக்காட்சிகளில் பேச வைக்கவும், சோனி மியூசிக் நிறுவனம் போன்றவைகள் பிண்ணனியில் இல்லாமலேயே, இந்த வீடியோ உலகெங்கிலும் உள்ள பாகிஸ்தானிய அரசியலை புரிந்து கொண்டவர்களிடையேயும் புகழடைந்திருக்கிறது. 2 மாதங்களுக்குள் யூடியூப் தளத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான தடவை பார்க்கப்பட்டிருக்கிறது.
பெரிய இடத்துப் பையன்கள் போல பள்ளிச் சீருடை அணிந்த மூன்று இளைஞர்கள், தமக்குப் பிடிக்காத சாப்பாட்டு டப்பாக்களை பழித்து பாடுவதாக வீடியோ. ‘பாகிஸ்தானின் அரசியல், மத, நீதி தலைவர்கள் சமைத்துப் போடும் உணவு தங்களுக்கு போரடித்துப் போய் விட்டது, புதிதாக ஏதாவது வேண்டும்’ என்று பாகிஸ்தானின் புனித பசுக்களை இரக்கமில்லாமல் தாக்கி எழுதப்பட்ட பாடல் வரிகள். பாடல் வரிகளுக்கு பஞ்ச் சேர்க்க இடையிடையே அரசியல் முழக்கங்கள் எழுதப்பட்ட அட்டைகள்.
பஞ்சாப் கவர்னராக இருந்த முற்போக்கு அரசியல்வாதி சல்மான் தசீரைக் கொன்ற கொலையாளி மும்தாஜ் கத்ரியையும், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்பையும் ஹீரோக்களாக கொண்டாடும் பாகிஸ்தான் சமூகம் 1979-ல் இயற்பியல் நோபல் பரிசு வென்ற அப்துஸ் சலாமை மறந்து விட்டதை நையாண்டி செய்கிறார்கள் இந்த மாணவர்கள்.
நவாப் ஷரீப் பை பை – பாபா கயானி நோ லைக் யூ (இராணுவத் தளபதிக்குப் பிடிக்காத அரசியல்வாதிக்கு பை பை தான்)என்று இந்நாளைய முன்னாளைய பாகிஸ்தானிய அமைப்பின் தலைவர்களை வாருகின்றன பாடல் வரிகளுக்கிடையே அவர்கள் உயர்த்திப் பிடிக்கும் அட்டைகள்.
தெஹ்ரீக்-இ-இன்சாப்- ஒப்பனை போட்ட ஜமாத்-எ-இஸ்லாமி (இம்ரான் கானின் புதிய அரசியல் கட்சி, ஜமாத்-எ-இஸ்லாமியின் முகமூடிதான்)
உனது பணம் + எனது பாக்கெட் = நாம் இன்னும் விரோதிகள்தான் (அமெரிக்க பணம் + பாகிஸ்தான் பாக்கெட்)
முல்லா + மிலிட்டரி = ஜியா உல் ஹக் (மதமும் ராணுவமும் சேர்ந்துதான் ஆட்சியாளர்களை உருவாக்குகின்றன)
‘இந்த பாடல் பலமாக அடிக்கும், வலிக்கும் படி அடிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். வீடியோவை வெளியிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு வரை என்ன விளைவுகள் ஏற்படும், எதிர்பார்ப்புகள், இத்தகைய ரிஸ்க் தேவைதானா என்று விவாதித்துக் கொண்டிருந்தோம்’.
மத, அரசியல் அமைப்புகளை விமர்சனம் செய்யும் யாரையும் யூதர்களின் சதி என்று சொல்லியோ, அல்லது ஒரு துப்பாக்கிக் குண்டின் மூலமோ வேலையை முடித்து விடும் பாகிஸ்தானிய கலாச்சாரத்துக்கு இடியாக ‘இது ஒரு யூதர்களின் சதி’ என்றும் ‘எங்கள் தலைக்குள் துப்பாக்கிக் குண்டு பாய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் இதை லைக் செய்யுங்கள்’ என்றும் காட்டுகிறார்கள்.
இசுலாமியக் கோட்டைக்குள்ளிருந்து கொண்டே அதே கேலி செய்யும் தைரியம் பாரட்டத்தக்கது. இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இந்தப்பாட்டிற்காக தங்களது தலையில் குண்டு பாயும் என்ற யதார்த்தத்தைக் கூட கேலி செய்யும் இந்த இளைஞர்களது நெஞ்சுரம் போற்றத்தக்கது. பாடலை முடிந்த அளவு மொழிபெயர்த்திருக்கிறோம். யூடியூபில் ஆங்கில வரிகளுடன் நீங்கள் இதை ரசிக்கலாம். பிடித்திருந்தால் நண்பர்களிடமும் பரப்பலாம்.
பாடல் வரிகள்:
எங்க அம்மா செஞ்சா உருளைக்கிழங்கு முட்டை கறி
எனக்கு இஷ்டம் இல்ல உருளைக்கிழங்கு முட்டை கறி
எனக்கு சாப்பிட இஷ்டம் ரொட்டியோடு சிக்கன்
பருப்பு விலையை விட விலை குறைஞ்சது சிக்கன்
சொட்டைங்க தொங்குறாங்க பட்டங்களைப் பிடித்து
தலைமை நீதிபதிதான் வெளிச்சம் – கான் போட்ட இருட்டுக்கு
பதவி நீட்டித்தலுக்கான களேபரம்
தலைமை நீதிபதி ஆனாரு கம்முன்னு
கத்ரிக்கு ராஜா போல உபச்சாரம்
கசாப்புக்கு ஹீரோ போல பிரச்சாரம்
முல்லா முக்காடு போட்டு எஸ்கேப்பு
மறந்து போன கதை அப்துஸ் சலாம்
சர்க்கரை கறுப்பு சந்தையில் விற்பனை
அரசியல் கிளிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்
பிளாக்வாட்டர் ஏன் டென்சன்
தாக்குதல்கள் உள்ளே இருந்தே நடக்குது
மாவை எவ்வளவு விரிச்சாலும் சட்டி சின்னதாத்தான் இருக்கு
கொள்ளையனுங்க பார்த்துப் பார்த்து கொல்றான்
போலீசுக்கு யாரு வைப்பாங்க ஆப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக