அரசு டாக்டர்களின் அலட் சியத்தால் வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக ஒரு பெண் பரிதவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயி. இவரது மனைவி காயத்ரி (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் (8ம் தேதி) அனுப்பி வைத்தனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட காயத்ரிக்கு இரண்டு நாள் ஆகியும் அறுவை சிகிச்சை செய்யப்பட வில்லை.
இந்நிலையில் நேற்று, அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளை பார்க்க வந்த ராமமூர்த்தி எம்எல்ஏவிடம், காயத்ரியின் உறவினர்கள் இதுகுறித்து புகார் கூறினர்.
மருத்துவர்களின் அலட்சி யத்தை பார்த்து கொதிப்படைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ ராமமூர்த்தி உடனே மருத்துவமனை டீன் தேன் மொழி வள்ளியை சந்தித்து பேசினார். வயிற்றில் இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரியாதா? உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டிய நீங்கள் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து விரைவில் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, டீன் தேன்மொழி வள்ளி உறுதி அளித்தார்.
நேற்று இரவு 10 மணி அளவில், காயத்ரிக்கு ஆபரேஷன் செய்து, இறந்த குழந்தை அகற்றப்பட்டது. தற்போது காயத்ரி நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக