முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சட்டத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்சோதி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. தமிழக அமைச்சரவையில் இரண்டு அமைச்சுக்களை வைத்திருந்த இவர், தனது இரண்டாவது மனைவி கொடுத்த புகாரால் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரசையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்வது ஒன்றும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமல்ல. தமிழக அமைச்சர்கள் பலரும் பாக்கெட்டில் ரிட்டர்ன் டிக்கெட்டுடன்தான் அமைச்சராக உள்ளனர் என்பது ஒன்றும் பரம ரகசியமுமல்ல.
ஆனால், இந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் பதவியை இழந்தது, முதல்வரின் வழமையான அதிரடி தூக்கியெறிதல் நடவடிக்கையால் அல்ல.
இந்த மனுசன், இதற்காக ரொம்பவும் முயற்சியெடுத்து வெளியே போயிருக்கிறார்!
பரஞ்சோதி ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இருக்க, இரண்டாவதாக திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் ராணி என்பவரை திருமணம் செய்வதாக கூறி ஒரு டீல்-மேக்கிங் செய்திருக்கிறார்.
டீல் என்னவென்றால், முதல் மனைவியை விவகரத்து செய்வதற்கு, இரண்டாவது மனைவி லட்சக்கணக்கில் பணம், நகை, நிலம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். இதுதான் டாக்டர் ராணி தனது புகாரில் கூறியுள்ள பின்னணி.
திருச்சியில் இப்படியொரு அட்டகாசமான மார்க்கெட் வேல்யூவுடன் விளங்கிய பரஞ்சோதி, டீலின்படி பணம், நகை, நிலம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டார். ஆனால், அதன்பின் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதே டாக்டர் ராணியின் புகார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் புஷ்பராணி, “பரஞ்சோதி மீது அரசு மருத்துவமனை போலீசார், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, டிசம்பர் 9ம் தேதிக்குள் ஜே.எம்.-4 கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்” என்று, கடந்த மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டார்.
இப்படியொரு உத்தரவு கோர்ட்டில் இருந்து கொடுக்கப்பட்டு விட்டதால், அரசு மருத்துவமனை போலீசார், அமைச்சர் பரஞ்சோதிமீது வழக்கு பதிவு செய்து, அதற்கான அறிக்கையை, ஜே.எம்.-4 கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளி, நம்ம சட்டத்துறை அமைச்சராக இருந்துவிடவே, அமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு விட்டார்.
பரம்சோதி தமிழகத்தின் சட்டத்துறைக்கே அமைச்சராக இருந்தபோதுதான், இந்திய கிரிமினல் சட்டப்படி ஜாமினில் வெளிவர முடியாத ஆறு பிரிவுகளிலும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதைத்தான், பிளாக்-ஹியூமர் என்று சொல்வார்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக