வெள்ளி, 9 டிசம்பர், 2011

மலையாள நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்; இந்து மக்கள் கட்சி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர், நடிகைகள் சமீபத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் திரையுலகம்தான் வாழ வைக்கிறது. இங்குள்ள படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். நயன்தாரா, அசின், மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், காவ்யா மாதவன், ஜோதிர்மயி, கோபிகா மற்றும் தற்போது முன்னணி நடிகையாகி உள்ள அமலாபால் மேலும் பல புதுமுக நடிகைகள் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர்கள்.

கேரள நடிகர்களும் தமிழ் படங்களில் நடிக்கின்றனர். தமிழ் நடிகர், நடிகைகள் முல்லை பெரியாறு பிரச்சினையில் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர்.

ஆனால் மலையாள நடிகர்கள் சுரேஷ் கோபி, திலீப், முகேஷ் உள்ளிட்ட பலர் எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர். இவர்கள் தமிழ் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

கேரள வணிக நிறுவனங்கள் அவற்றின் விளம்பர படங்களிலும் தமிழ் நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து விற்பனையை பெருக்கி வருகின்றன. அந்த படங்களில் தமிழ் நடிகர்கள் நடிக்காமல் புறக்கணிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: