செவ்வாய், 6 டிசம்பர், 2011

தப்பியது காங்.அரசு: நம்பிக்கை ஓட்டில் வெற்றி

ஐதராபாத்: ஆந்திரா சட்டசபையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 38 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆந்திராவில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டசபையில் நடந்தது. இதில் ஆந்திர அரசு விவசாயிகள் தற்கொலை பிரச்சனை, தெலுங்கான பிரச்னை உள்ளிட்ட எல்லா நிலைகளில் தோல்வியடைந்துள்ளது.
இதனால் கிரண்குமார்ரெட்டி பதவிவிலக வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி வலியுறுத்தியது. நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டதை இதைத்தொடர்ந்து முதல்வர் கிரண்குமார் ரெட்டி மீது முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். நேற்று மதியம் துவங்கி நள்ளிரவு வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கிரண்குமார் அரசு வெற்றி பெற்றது. 38 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் பதவி தப்பியது.

முன்னதாக ஆந்திர சட்டசபை நேற்று நள்ளிரவு வரை நடந்தது. காரசார விவாதங்கள் நடந்தன. மதியம் 12.55 துவங்கிய விவாதரம் மொத்தம் 16 மணிநேரம் நடந்தது. இறுதியில் கிரண்குமார் அரசை ஆதரித்து 122 ஓட்டுக்கள் பதிவாகின. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். ஒரு எம்.எல்.ஏ. ஓட்டளிக்கவில்லை.

நாயுடு கொண்டுவந்த 2-வது முறை: ஆந்திரபிரதேச அரசியல் வரலாற்றில் இதுவரை அமைந்த பல்வேறு அரசுகள் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இது 9-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இது எனவும், இவற்றில் தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு கொண்டுவந்த இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகும். கடந்த 2008-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ‌கொண்டுவந்தார் சந்திரபாபு நாயுடு. தற்போது கிரண்குமார் ரெட்டி அரசு மீது இரண்டாவது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளார். இரண்டிலுமே அவருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: