சென்னை, நவ.20- பெண்கள் ஜோடித்த பொய்யான வழக்குகளில் சிக்கி ஆண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் வழக்கறிஞர் அருந்து மிலன் கூறியுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:-
சென்னையில் இன்று உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. வக்கீல் அருந்துமிலன் தலைமை தாங்கினார். பால்கனகராஜ் தொடங்கி வைத்தார். இதில் சென்னையை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பலரும் வரதட்சணை கேட்டு மிரட்டிய வழக்கு, குடும்ப வன்முறை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சிதைந்து கொண்டிருப்பவர்கள், வாழவும் முடியாமல் வேலைக்கும் போகவும் முடியாமல் தினமும் அவதிப்படுவதாக குமுறினார்கள். வேளச்சேரியை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் கூறியதாவது: மனைவி அடிக்கடி ஊருக்கு சென்றுவிடுவார். கூப்பிட போனாலும் பிரச்சினை. கூப்பிடாவிட்டாலும் பிரச்சினை. அடித்ததாகவும், உதைத்ததாகவும் பொய்யான முறையில் வரதட்சணை புகார் கொடுத்தார்கள்.
வங்கியிலும் வந்து தகராறு செய்ததால் வேலையை இழந்தேன் என்றார். ஆண்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் அருந்துமிலன் கூறும்போது பெண்கள் ஜோடித்த பொய்யான வழக்குகளில் சிக்கி பல ஆண்கள் பாதித்துள்ளனர். குடும்ப வன்முறை சட்டங்கள் ஆண்களுக்கு எதிராகவும், அடிமைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. பெண்களின் பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சட்டரீதியாக உதவுவதற்கு தனி அறக்கட்டளை தொடங் கப்படும் என்றார். கருத்தரங்கில் மூத்த வக்கீல்கள் கார்த்திக், அருள்மொழிமாறன் உள்பட பலர் பேசினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக