சனி, 26 நவம்பர், 2011

சொத்து விஷயத்தில் துரைமுருகன், பழனி முருகன் ரேஞ்சில் இல்லை!


Chennai, India: The residences and business premises of D Duraimurugan, former law minister in the DMK government, and those of his close relatives were raided yesterday (Thursday) on charges of amassing wealth disproportionate to his known sources of income. These raids were conducted by The Directorate of Vigilance and Anti-Corruption ( DVAC). Earlier, the same agency raided the residences and office premises of former DMK Ministers KN Nehru, TM Anbarasan, K Ponmudi, N Suresh Rajan and MRK Panneerselvam.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான நில அபகரிப்பு புகார் ரவுண்ட் முடிந்து, சொத்துக் குவிப்பு ரவுண்ட் வேகம் எடுக்கத் விட்டது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், துரைமுருகன் தொடர்பான வேறு இடங்களிலும் புகுந்து புறப்பட்டுள்ளனர்.சொத்துக் குவிப்பு ரவுண்ட் ஏற்கனவே தொடங்கியதுதான். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன், அன்பரசன் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர். அடுத்த கட்டத்தில் வருகிறது துரைமுருகன் விவகாரம்.

துரைமுருகன் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 3 ஆண்டுகளுக்கான வருமானம் தொடர்பாக நடாத்தப்பட்ட சோதனைகள் இவை. 2006 மார்ச் 31-ம் தேதியில் இருந்து, 2009 மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக, துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பாகவே, சென்னை, மற்றும் வேலூரில் துரைமுருகன், அவரது சகோதரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சோதனை நடந்தது.
துரைமுருகனுக்குச் சொந்தமான, கோட்டூர்புரம் (சென்னை) வீட்டில்தான் பிரதானமாக சோதனை நடாத்தப்பட்டது. சோனைக்காக அதிகாரிகள் அங்கு சென்றபோது, துரைமுருகன் அங்குதான் இருந்தார். மாலை 4 மணிக்கு சோதனை முடியும்வரை துரைமுருகன் வீட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கோட்டூர்புரம் வீடு தவிர, துரைமுருகனுக்கு சென்னையில் வேறு பல வீடுகளும் உள்ளன. இவற்றில் 3 வீடுகளை மாத்திரம் குறிவைத்த அதிகாரிகள் அங்கு சோதனைகளை நடாத்தினர். அடையாறு காந்தி நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ளன இந்த வீடுகள். இங்கு சோதனைகள் சுருக்கமாகவே நடந்து, காலை 11 மணிக்கே முடிவடைந்து விட்டன. அங்கும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் வேலூரில் உள்ள துரைமுருகன் பங்களாவில் (காந்தி நகர், 5வது குறுக்குத் தெரு) ஒரு டீம் அதிகாரிகள் சோதனைக்காக சென்றபோது, அங்கு, துரைமுருகன் மனைவி சாந்தகுமாரி, மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் இருந்தனர். அங்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பங்களாவில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், முன்பு துரைமுருகன் அவ்வளவு பசையாக இல்லாத காலத்தில் குடியிருந்த சிறிய வீட்டுக்குள் மற்றொரு டீம் நுழைந்து சோதனையிட்டது.
அதே நேரத்தில் வேறொரு டீம், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் நடத்தி வரும், கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரிக்குள், புகுந்து சோதனை நடாத்தியது. துரைமுருகனுக்குச் சொந்தமான துரைமுருகன் பி.எட். கல்லூரி, துரைமுருகன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவையும் சோதனையிலிருந்து தப்பவில்லை. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் காட்பாடியில், ‘அருவி’ என்ற பெயரில் மினரல் வாட்டர் கம்பெனி நடாத்தி வருகிறார். அங்கும் சோதனை நடந்தது. ஏலகிரி மலையில் துரைமுருகன் ஓய்வெடுப்பதற்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது. அதுவும் சோதனைக்கு உள்ளாகியது.
தமிழகமெங்கும் உள்ள துரைமுருகனின் மற்றைய சொத்துக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் சோதனைகள் நடாத்தப்படவில்லை.
இந்த சோதனைகள் துரைமுருகன் தனது பதவிக்காலத்தில் 3 ஆண்டுகளில் வருமானத்தைவிட அதிக சொத்து சேர்த்தது தொடர்பாக ஆவணங்களைப் பெறுவதற்காக நடாத்தப்பட்ட சோதனைகள் மாத்திரமே. கடந்த தி.மு.க. ஆட்சியில் துரைமுருகன் 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அதற்கு முந்தைய தி.மு.க. ஆட்சிகளிலும் பதவியில் இருந்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: