திங்கள், 21 நவம்பர், 2011

எம்.பி.,க்களை திரும்ப பெறும் உரிமை நம் நாட்டிற்கு சரிப்படாது: பிரணாப்

மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை அல்லது நிராகரிக்கும் உரிமை என்பது, நம் நாட்டிற்கு சரிவராத ஒன்று,'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
கோல்கட்டாவில், அவர் கூறுகையில், ""உலகிலேயே, மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு, 122 கோடி மக்கள் உள்ளனர். ஒவ்வொரு லோக்சபா எம்.பி.,யையும், சராசரியாக 15 லட்சம் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கின்றனர்.அப்படிப்பட்ட நிலையில், எம்.பி.,க் களை, எம்.எல்.ஏ.,க்களை திரும்பப் பெறும் உரிமை அல்லது அவர்களை நிராகரிக்கும் உரிமை, நம் நாட்டிற்கு சரியாக வரும் என, எனக்குத் தெரியவில்லை. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரிப்படாது'' என்றார்.ஊழல் மற்றும் ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகர் அன்னா ஹசாரே, தன் 12 நாள் உண்ணாவிரதத்தை முடித்த போது, "தேர்தல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் அல்லது நிராகரிக்கும் உரிமை வழங்கக் கோரி, அடுத்த கட்டமாகப் போராடுவேன்' என, தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: