செவ்வாய், 22 நவம்பர், 2011

திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை இனி திகார் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும் என வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஓ.பி.,சைனி அறிவித்துள்ளார்.

கைதிகள் கோர்ட்டுக்கு அழைத்து வரும் சிரமம் இனி போலீசாருக்கு இருக்காது என்றாலும் விசாரணை என்ற நேரத்தில் திகார் ஜெயிலில் இருந்து பாட்டியாலா சிறப்பு கோர்ட்டுக்கு வந்து செல்லும் வாய்ப்பு பறிபோனது. இந்த நேரத்திலாவது வெளி உலகை பார்க்கும் நிலை இழக்க வேண்டியிருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜா மற்றும் கனிமொழி உள்பட . கைதிகள் கோர்ட்டுக்கு வரும்‌போது உறவினர்கள் பலரும் கூடுவதாலும், இவர்கள் சந்திப்பை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோர்ட் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் நீதிபதி தரப்பில் இதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கை பொறுத்த வரையில் அனைவருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறைக்குள்ளே கோர்ட்டை நடத்த நீதிபதி எடுத்த முடிவு குற்றவாளிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நீதிபதியின் முடி‌‌வை டில்லி ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டது.

கருத்துகள் இல்லை: