திங்கள், 21 நவம்பர், 2011

அழகிரி பற்றிப் பேசுவதை கவனமாக தவிர்த்த வைகோ!

Viruvirupu

Thanjavur, India: Marumalarchi Diravida Muneta Kazagam (MDMK) General Secretary Vaigo strongly criticised both the Union and Tamil Nadu Governments of inefficiency and failure to solve the problems of farmers. He said it was high time both the governments took necessary steps to bring down the prices of fertilisers.“கடந்த 18 ஆண்டுகளில், இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிகளை நாம் பெறவில்லை. அப்படி இருந்தும்கூட, ஒரு பிரச்னை என்றால் போராடுவதற்கு மக்கள் நம்மைத்தான் அழைக்கின்றனர். ஏனென்றால், போராட்டம் என்று வந்துவிட்டால் உறுதியாக இருப்போம், சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார் வைகோ.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, “ஐந்து மாவட்டங்களுக்கு பாசனம் தரும் முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு உடைக்கப் போகிறது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், இங்கிருந்து கேரளத்திற்குச் செல்லும் சாலைகளைத் துண்டிப்போம்” என்று கூறினார்.
விவசாயிகளின் நலன்களைக் நலன்களை முன்னிறுத்தி இனிவரும் காலங்களில் போராட்டங்களை நடாத்துவதுதான் ம.தி.மு.க.-வின் திட்டம் எனவுத் தெரிவித்தார் அவர். இதற்காக அவரது கட்சி விவசாயிகளை ஒன்று திரட்டி போராடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறுகிறார்.
நேற்று ம.தி.மு.க. சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டம்கூட விவசாயிகளுடன் தொடர்புபட்ட போராடம்தான். விவசாயத்துக்கு தேவையான உரங்களின் விலைகளைக் குறைக்கக் கோரியும், தட்டுப்பாடின்றி அவற்றை விநியோகிக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நடாத்தப்பட்ட போராட்டம் அது.
“தமிழக முதல்வர் ஜெயலலிதா, உரங்களின் விலையேற்றம் குறித்து எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. தனிப் பெரும்பான்மையுடன் அவரைத் தமிழக மக்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்துள்ளனர். எனவே, உரம் விலையேற்றத்தைக் கண்டித்து, அவர் குரல் எழுப்பியிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட வைகோ, “மத்திய அரசு, உர விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
மத்தியில் உரத்துறைக்கு அமைச்சராக இருப்பவர் தி.மு.க.-வின் மு.க..அழகிரி. அப்படியிருந்த போதிலும் வைகோ, மு.க.அழகிரி குறித்து ஏதும் கருத்து தெரிவிக்காமல் பொதுப்படையாக மத்திய அரசை விமர்சனம் செய்தது ஆச்சரியமான நிகழ்வு. அவரது கட்சியைச் சேர்ந்த மற்றையவர்களும் அழகிரி பற்றிய விமர்சனத்தை தவிர்த்தது, சில சந்தேகங்களை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது.
விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி அமைப்பதற்காக எல்லா கதவுகளையும் வைகோ திறந்து வைத்திருக்கிறார் என்பது போலத்தான் அவரது பேச்சு உள்ளது. அரசியலில் அதில் தவறு ஏதுமில்லை.

கருத்துகள் இல்லை: