புதன், 23 நவம்பர், 2011

விஜயகாந்த் கட்சி நிர்வாகிகள் ‘1 நாள் முதுகு இன்ஷூரன்ஸ்’ செய்ய ஆர்வம்!

Viruvirupu; Chennai, India: Actor-politician and DMDK Founder Vijayakanth will lead one day token fast tomorrow (Thursday) in front of party headquarters at Koyambedu. His party is demanding roll back of the hike in bus fares and milk prices. As per a statement from DMDK,  party regional leaders and MLAs would observe the fast in their respective districts.
சுவத்தில் கால்வைத்து ஜம்ப் பண்ணி அடித்து (சினிமா) பழக்கப்பட்ட விஜயகாந்த் அகிம்சாவாதியாக உண்ணாவிரதம் இருக்கும் காட்சியை நீங்கள் நாளை பார்க்க முடியும். பால் விலை, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து அவரது கட்சியான தே.மு.தி.க. சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நாளை நடைபெறவுள்ளது.
கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிகின்றது. இவர்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பந்தலை விட்டு வெளியேறக் கூடாது என்பது முக்கிய கண்டிஷன். பந்தலுக்கு உள்ளே இருக்கும்வரை சோமபான தாகசாந்தி செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தலைவருக்கும் அதே கண்டிஷனா?)

பொதுவாகவே விஜயகாந்தின் உத்தரவுகளை நிறைவேற்றாதவர்களுக்கு அவர் ‘ஷோ-காஸ் மெமோ’ கொடுப்பதில்லை. முதுகில் கொடுப்பதுதான் வழக்கம்.
தமிழகம் முழுவதிலும் உண்ணாவிரதம் இருப்பதுதான் திட்டம். ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறாக நடக்கும் உண்ணாவிரதத்தில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டும் என்பது உத்தரவு. பிரதான உண்ணாவிரதம் சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெளியே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றய மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
கோயம்பேட்டில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார்.
சட்டசபை தேர்தலில் கிடைத்த பெயரை உள்ளாட்சித் தேர்தலில் தொலைத்தபின் தே.மு.தி.க. முதன்முதலில் நடாத்தும் போராட்டம் என்பதால், இதில் சறுக்கல் இருக்கவே கூடாது என்பது விஜயகாந்த் உத்தரவாம். சென்னையில் விஜயகாந்த் கலந்து கொள்ளும் உண்ணாவிரத ஸ்பாட்டுக்கு 30,000 பேர் வருவார்கள் என்று சென்னை தே.மு.தி.க.-வினர் சொல்லிக் கொள்கிறார்கள்.
அதே நேரத்தில் அவ்வளவு ஆட்கள் வருவார்களா என்பதில் கட்சிக்காரர்களுக்கே சந்தேகம் உள்ளது.
அதேநேரத்தில் அந்தளவுக்கு மக்கள் திரண்டு வருவார்களா என்பதில் கட்சித் தலைமைக்கே சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. காரணம், இவர்களது கட்சி அலுவலகத்துக்கு முன்னால் அவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் கூட முடியாது. தவிர இவர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே உள்ள உறவு அவ்வளவு சுமுகமாக இல்லாத காரணத்தால், காவல்துறையினரின் ஒத்துழைப்பும் கிடைப்பது சந்தேகம்.

கருத்துகள் இல்லை: