லண்டன், : சாப்பாட்டில் உப்பு அளவை குறைத்தால் இதயம் தொடர்பான நோய்கள் வரலாம் என மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. அளவாக இருப்பதே நல்லது என்கிறது அது.
உணவில் உப்பு அளவு அதிகரித்தால் பக்கவாதம், ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் என்று மக்களிடம் நம்பிக்கை உள்ளது. அதனால் உப்பு குறைந்த உணவு மற்றும் பண்டங்களை சாப்பிடுகின்றனர். ஆனால், குறைவாக உப்பு எடுப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் வரும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனை விஞ்ஞானிகள் மனித உடல் நலத்தில் உப்பு ஏற்படுத்தும் மாற்றம் பற்றி ஆராய்ச்சி செய்தனர். அதற்காக 40,000 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி பல்வேறு கட்ட ஆராய்ச்சி செய்தனர்.
இறுதியில் உப்பு அளவு குறைவால் இதய நோய்க்கு காரணமாகும் கொழுப்புச் சத்து 2.5 சதவீதமும், ரத்தக் கட்டி உருவாகும் நிலை 7 சதவீதம் அதிகரித்தது தெரிய வந்தது.
உப்பை குறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக சிகரெட் பிடிப்பது, மது அருந்துவதை குறைத்தும், உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலே இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று முன்னணி ஆராய்ச்சியாளர் நியல்ஸ் கிரேடல் தெரிவித்தார். உப்பு அளவை குறைப்பதால் இதய நோய் வரும் என்ற ஆய்வு தகவலை சில ஆராய்ச்சியாளர்கள் ஆதரித்தாலும், இந்த விஷயத்தில் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என சிலர் கூறினர்.
ரத்த அழுத்தம் உட்பட சில நோய்களில் இருந்து பாதுகாக்க பெரியவர்கள் தினசரி 6 கிராமுக்கு மேல் உணவில் உப்பு சேர்க்க கூடாது என்று இதய நோய்க்கான நிபுணர் கெய்த பெர்டினண்ட் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக