டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 10 புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவி்த்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கூடங்குளம் விவகாரம் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது கூங்குளம் அணுமின் நிலையத்தி்ற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து உறுப்பினர்கள் விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,
தற்போது இந்தியாவில் 19 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் நாட்டிற்கு 4,650 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. கூடங்குளம் உள்பட 7 இடங்களில் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருதிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் அந்த 7 அணுமின் நிலையங்களில் 5,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12வது ஐந்தாண்டு திட்ட காலமான 2012-17ம் ஆண்டுகளில் மேலும் 10 புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த திட்ட காலத்திற்கு முன்பாக அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டம் இல்லை என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி மக்கள் நடத்தும் போராட்டம் இன்று 100வது நாளைத் தொட்டுள்ளது. இந்நிலையில் நாராயணசாமியின் அறிவிப்பு மக்கள் என்னதான் போராட்டம் நடத்தினாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மத்திய அரசு மூடாது என்பது போல் உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக