சென்னை, நவ.25: நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கந்துவட்டி புகார் அளித்துள்ளார்.அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த ஷேக்மாதர் என்பவர் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.நடிகர் மன்சூர் அலிகான் தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி வருவதாக இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் விவரம்: நான் தொழில் வளர்ச்சிக்காக இடைத்தரகர் மூலம், மன்சூர் அலிகானிடம் 2 தவணையாக ரூ.30 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இந்த கடனுக்கான அசலையும், வட்டியையும் கட்டி வந்தேன்.ரூ.30 லட்சம் வாங்குபோதே வட்டியாக ரூ.6 லட்சத்து 37 ஆயிரத்தை பிடித்துக்கொண்டுதான் கொடுத்தார். இதுவரை ரூ.26 லட்சத்து 37 ஆயிரம் திருப்பி கொடுத்துவிட்டேன். மேலும் ரூ.4 லட்சம் தருவதாக நான் மன்சூர் அலிகானிடம் கூறினேன். ஆனால் அவர் இன்னும் ரூ.25 லட்சம் தரவேண்டும் என்று என்னை மிரட்டி வருகிறார்.எனது வீட்டில் புகுந்து அனைத்து பொருட்களையும் அள்ளி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக அரும்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார், மன்சூர் அலிகானிடம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து மன்சூர் அலிகான் என்னை மிரட்டி வருகிறார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்.இவ்வாறு ஷேக்மாதர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக