வொய் திஸ் கொலவெறி தான் இன்று மார்க்கெட்டின் மவுஸ் பீஸ். அட்றா அவள... ஒதறா அவள... என லோ கிளாஸ் ரசிகனின் மடியில் உட்கார்ந்து மனசை படிக்க ஆரம்பித்துவிட்டார் தனுஷ்.
இந்த வரிகள் தாறுமாறாக ஹிட் ஆகி, தனுஷை ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியராகவும் உருவாக்கிவிட்டது. திரைப்பட பாடல் எழுத ஒரு கவிஞன் அவசியமில்லை. அவன் கவிஞனாக இருந்தால் தப்பில்லை என்றார் வைரமுத்து. தப்பி தவறி கூட கவிஞனாக முடியாத தனுஷ், தரை டிக்கெட் பாடலாசிரியர் ஆனதுதான் ஊரே கொண்டாடும் உச்சாணி விஷயம்.
இது ஒருபுறம் இருக்கட்டும். இந்த வொய் திஸ் கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் செம அப்ளாஸ் கிடைத்து வருகிறது. இவரது புகைப்படத்தை மட்டுமே தனியாக பிரசுரித்து விளம்பரங்களில் தனி அட்ராக்ஷன் ஏற்படுத்தி வருகிறார் 3 படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா.
எவ்வளவுதான் ஹிட் பாடல்களை போட்டுக் கொடுத்தாலும், அவரை ஸோலோவாக விளம்பரங்களில் பயன்படுத்துகிற பெரிய மனசு யாருக்கும் வராது.அதுவும் முதல் படத்திலேயே இப்படி ஒரு அந்தஸ்து அவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு பின்னணி என்னவாக இருக்கும்?
மண்டையை குழப்பி மசாலா தடவியெல்லாம் யோசிக்க தேவையில்லை. இந்த அனிருத், லதா ரஜினிகாந்த்தின் சகோதரர் மகன்தானாம்.
எவ்வளவுதான் நெருங்கிய உறவாக இருந்தாலும் பாட்டு நன்றாக இல்லையென்றால் எவ்வளவு பில்டப் கொடுத்தாலும் அது பில்டிங் ஸ்டிராங். பேஸ்மென்ட் வீக் கதையாகதான் அமையும். ஆனால் அனிருத் விஷயத்தில் நடந்ததெல்லாம் சரி. சரியை தவிர வேறில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக