வியாழன், 8 செப்டம்பர், 2011

ஜெயாவை தோற்கடிக்க முயன்றதால் ராமஜெயதிற்கு சிறை

  ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா தேறுவார என்று அதிமுகாவினரே பயப்படும் அளவிற்கு அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் சூறாவளியாக வேலை செய்தார். அந்த கோபம் அடங்காத அம்மா ராமஜெயத்தை பந்தாட தொடங்கிவிட்டார்

முன்னாள்  அமைச்சர் கே.என்.நேரு, கலைஞர் அறிவாலயம் கட்ட இடம் வாங்கியது தொடர்பாக டாக்டர் சீனிவாசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். இவரோடு முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, லால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கைப் பதிவு செய்தது காவல்துறை. கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேருவின் ஒரே மகனான அருணின் திருமண நிச்சயதார்த்த விழா குறிஞ்சிப்பாடியில் 2-ந் தேதி நடந்தது. இதற்காக ஒரு நாள் பரோலில் வந்து மகனின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார் நேரு. குடும்ப விசேஷத்துக்கு போலீஸ் பாதுகாப்போடு நேரு வந்ததைக் கண்ட உறவுப் பெண்கள் உட்பட பலரும் கண் கலங்கினர். நேருவைப் பார்க் கும் ஆவலில் ஆயிரக்கணக்கான உ.பி.க்களும் அங்கு குவிந் திருந்தனர். மீண்டும் சிறைக்கு கொண்டுபோகப்பட்ட நேருவை போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவரை 5-ந் தேதி காலை திருச்சி ஜே.எம். நான்காவது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் காக்கிகள். காவல்துறை ஏ.சி.மாதவன் மாஜிஸ்திரேட் புஷ்பராணி முன் ஆஜராகி ‘நேருவிற்கு மட்டுமே தெரிந்த சில தகவல்களை விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே அவரை 5 நாள் கஸ்டடி விசாரணைக்கு அனுப்பவேண்டும்’ என்றார். பி.பி.யான தனபாக்கியம் இதை வலியுறுத்தி தனது வாதத்தை வைத்தார். நேரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களான அருள்மதி வர்மனும் ஓம் பிரகாஷும், ‘இவர் மீதான சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றும் நோக்கத்தில் கஸ்டடி விசாரணைக்குக் கேட்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது’ என்றனர் அழுத்தமாய். மேலும், ""கலைஞர் அறிவாலயம் நிலத்திற்காக டாக்டர் சீனிவாசன் 69 லட்ச ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு அதில் 3 லட்சத்து 50 ஆயிரத்தை வரு மான வரியாக கட்டியிருக்கிறார். பணம் வாங்கவில்லை என்றால் எப்படி வரி கட்டியிருப்பார்?'' என்று நேரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் வைக்க, ""பணம் கொடுக்காமல் மிரட்டியது போலவே, வருமான வரி கட்டும்படியும் மிரட்டி கட்ட வைத்து விட்டார்கள்'' என்று சமாளித்தது சீனிவாசன் தரப்பு. இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் மாலை 5 மணிக்கு இது தொடர்பான தீர்ப்பைத் தருவதாக அறிவித்தார். இந்த நிலையில் கட்டுக்கடங் காத அளவிற்கு உ.பி.க்கள் கோர்ட் வளாகத்தில் திரண்டதால் காவல்துறை, சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறியது. இதைக்கண்ட நேரு, தானே போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி கொந்தளிப்பில் இருந்த உ.பி.க்களைக் கட்டுப்படுத்தினார். இதற்கிடையே 5-ந் தேதி அதிகாலை நேருவின் தம்பியும் அ.தி.மு.க.வின ராலே எம்.டி. என்று அழைக்கப்படுபவருமான ராமஜெயத்தை கொச்சி யில் வைத்துக் கைதுசெய்திருக்கிறது போலீஸ். காரணம் ஜெ.’ இவர் மீது கொண்டிருந்த வன்மம். கடந்த தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் ஜெ.’ நின்றபோது, தனது அண்ணன் நேரு நின்ற திருச்சி மேற்குத் தொகுதியில் கூட அதிகம் தலைகாட்டாமல் அ.தி.மு.க.வினரே மிரளும் வகையில் களவேலை பார்த்தார் ராமஜெயம். ஒரு கட்டத்தில் ஜெ’கரையேறுவாரா என்று இலைத்தரப்பு கவலைப்படும் அளவிற்கு இவரது தீவிரப் பணி இருந்தது. இதனால் கார்டனின் கடும் கோபத்திற்கு ஆளானார் ராமஜெயம். இதே போல் தேர்தல் நேரத்தில் இலைத் தரப்பினருக்கு மட்டும் காவல்துறை முக்கியத்துவத்தைக் காட்ட, இது தொடர்பாக சிட்டி கமிஷன ரான மாசானமுத்துவுக்கும் ராமஜெயத்துக் கும் இடையே வாக்குவாதமே ஏற்பட்டது. இதன் எதிரொலியால் மேலிடத்தின் கோபத்தோடு கமிஷனரின் கோபமும் கூடுதலாகச் சேர்ந்துகொண்டது. இதனால் நில அபகரிப்பு வழக்கில் நேருவோடு சேர்க் கப்பட்ட ராமஜெயம் சரண்டராகும் முடி விற்கு வர... அவரது வழக்கறிஞர்களோ, ’இப்போதைக்கு சரண்டர் வேண்டாம். முன்ஜாமீனை வாங்கிவிடலாம். அதன்பின் போலீஸ் என்ன செய்கிறது என்று பார்க்க லாம்’ என தடுத்தனர். இதனால் தலைமறை வாகவே இருந்தார் ராமஜெயம். இந்த நிலையில் ‘வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய ராமஜெயத்தை ஏன் கைது செய்ய வில்லை?’ என காவல்துறையிடம் மேலிடம் காட்டம் காட்ட, அவரை தீவிரமாகத் தேடத்தொடங்கினர். இந்தியாவில் இருக் கும் அத்தனை விமான நிலையத்துக்கும் அவரது பாஸ்போர்ட் எண்ணை அனுப்பி உஷார்படுத்தினர். தன்னைச் சுற்றி கடுமை யான வலை பின்னப்பட்டிருப்பதை அறி யாத ராமஜெயம், துபாய் போகும் டிக்கட் டோடு 5-ந் தேதி அதிகாலை 3.45-க்கு கொச்சி ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தார். அங்கு இமிக்கிரேஷன் அதிகாரிகளிடம் தனது பாஸ்போர்ட்டைக் கொடுத்தார். அவர்கள் அதைப் பரிசோதிக்கும்போது ரெட் லைட் எரிய.. அப்போதே மடக்கப் பட்டுவிட்டோம் என்பதைப் புரிந்துகொண்டார். ரெட் லைட்டைக் கண்ட அதிகாரிகள் உள்ளறைக்குப் போய் யாரிடமோ பேசிவிட்டு "உங்கமேல் வழக்கு இருக்கு. நீங்கள் வெளிநாடு போகமுடியாது. கொஞ்சம் உட்காருங்க' என்றனர். ராமஜெயத்தை அருகில் இருக்கும் காவல்நிலை யத்தில் ஒப்படைக்கும்படி தமிழக போலீஸிடமிருந்து தகவல் வர.. அவரை அங்குள்ள நெடுமஞ்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நள்ளிரவில் திருச்சிக்கு அழைத்து வரப் பட்டார் ராமஜெயம். வையம்பட்டி அருகே தொழிலதிபர் துரைராஜும் டிரைவர் செந்திலும் சில வருடங்களுக்கு முன் காரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதில் ராமஜெயத்தை சிக்கவைக்கத் துடிக்கும் காக்கிகள், ரவுடி கர்ணன் தற்கொலை வழக்கு போன்ற வழக்குகளைக் கூட, கொலை வழக்காக ஜோடித்து ராமஜெயத்தின் தலையில் வைக்க, போலீஸ் தற்போது தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் திருச்சி இடைத்தேர்தல் முடியும் வரை ராமஜெயம் வெளியே வராத வகையில் பல மாவட்டங்களிலும் புகார்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேருவை கஸ்டடி கேட்ட விவகாரத்தை விசாரித்த மாஜிஸ்திரேட் புஷ்பராணி ’போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு அனுமதி இல்லை’ என காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இது உ.பி.க்கள் மத்தியில் பலத்த சந்தோசத்தை ஏற்படுத்தியது.’போலீஸோ அடுத்த வழக்குக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. -ஜெ.டி.ஆர். thanks nakkeeran+raj,trichy

கருத்துகள் இல்லை: