சனி, 10 செப்டம்பர், 2011

ஜெயா சொல்கிறார் ஊழல் செய்தவர்களை சும்மா விட மாட்டோம்

 
சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார்.
 அப்போது தி.மு.க. ஆட்சியின் போது போக்கு வரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பல முறைகேடுகளை செய்து இருப்பதாகவும் கூறினார்.

அதுபற்றிய விவரங்களை புத்தகமாக அச்சடித்து உறுப்பினர்களுக்கு வழங்க போவதாகவும் அறிவித்தார். இதுகுறித்து சபாநாயகர் ஜெயக்குமார் பேசும்போது, இந்த புத்தகங்களை பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

குணசேகரன் (இந்திய. கம்யூ.)இந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் இப்போதே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதா இதற்கு பதில் அளித்து பேசினார்.

அவர்,’போக்குவரத்து துறையில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது நடந்த முறைகேடுகள் பற்றிய விவரங்களை அமைச்சர் இங்கு வெளியிட்டார்.
அந்த ஊழல் தொடர்பாக இன்றே விசாரணை கமிஷன் அமைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உறுப்பினர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு அறிவிப்பையும் நான் அவசரமாக வெளியிடுவதில்லை. நன்றாக யோசித்து ஆராய்ந்து தான் அடியெடுத்து வைக்கிறேன். அதனால்தான் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கிறது.

இந்த ஊழல் தொடர்பாகவும் சிந்தித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய ஊழல் செய்தவர்களை இந்த அரசு சும்மா விடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: