சனி, 10 செப்டம்பர், 2011

மத கலவர தடுப்பு மசோதா அபாயகரமானது: பா.ஜ., - திரிணாமுல் காங்., எதிர்ப்பு

புதுடில்லி: மதக்கலவர தடுப்பு மசோதா உருவாக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருவதுடன் தற்போது விவாதிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சி்ங் தெரிவித்தார். இந்த மசோதா நாட்டிற்கு அபாயகரமானது என பா.ஜ., எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ராஷ்ட்டிரிய ஜனதாதளம், ஆளும் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்., மற்றும் இடது சாரி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1962 ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 15 வது கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பார்லி., எதிர்கட்சி பிரதிநிதிகள், மற்றும் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.

பயங்கரவாதமும், இடதுசாரி தீவிரமும் நாட்டின் பெரும்சவால்களாக இருக்கின்றன என்றும், சமீபத்திய டில்லி குண்டுவெடிப்பு தடுக்க மு‌டியாமல் போனதும், இன்னும் இது போன்ற விஷயங்கள் கண்காணிப்பில் இருந்து விலகி செல்லாதவாறு உஷாராக ‌இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.


இன்றைய கூட்டத்தில் பிரதமர் பேசுகையில்; நாட்டில் பயங்கரவாதம், இடதுசாரிகளின் தீவிரம் பெரும் சவால்களாக உள்ளன. டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் முனனெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்படாமல் போய் விட்டது. இன்னும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் நமது சுய பரிசோதனை அவசியம். கடந்த 2 ஆண்டுகளில் நமது விசாரணை அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் கூடுதல் பலம் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். பயங்கரவாத ஒழிப்பில் மத்திய , மாநில ஒத்துழைப்பு அவசியமானதாக இருக்கிறது என மனதில் வைத்து செயல்பட வேண்டும். நாட்டில் சாதி , மதம் ஆகியவற்றினால் எழுகின்ற பிரச்னைகளை ஒழிக்க போலீசார் வெகு கவனத்துடன் செயல்பட வேண்டும். விசாரணை அதிகாரிகள் ஒரு சார்பு நிலை இல்லாமல் நாட்டு மக்களுக்கு சேவை புரிய வேண்டும். மேலும் பயங்கரவாதம் வேரறுக்க முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

ஜெ., மாயாவதி பங்கேற்கவில்லை : இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தை தமிழக முதல்வர் ஜெ., உ .பி., முதல்வர் மாயாவதி , குஜராத் முதல்வர் நநேரந்திர மோடி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி, ஆகியோர் பங்கேற்கவில்லை. இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியும் பங்கேற்கவில்லை.

கருத்துகள் இல்லை: