சனி, 10 செப்டம்பர், 2011

போட்டி நாடுகள் வரிசையில் 52 ஆம் இடம் இலங்கைக்கு!

உலகின் போட்டித் தன்மைவாய்ந்த நாடுகள் வரிசையில் 52 ஆம் இடம் இலங்கைக்கு!

உலக பொருளாதார மன்றம் சர்வதேச ரீதியில் மேற்கொண்ட உலகின் போட்டித் தன்மைவாய்ந்த 142 நாடுகள் தொடர்பான ஆய்வில் இலங்கை 52 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் 62 ஆவது இடத்திலும், அதற்கு முன்னர் 79 ஆவது இடத்திலும் இருந்த இலங்கை இம்முறை 52 ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையானது கடந்த வருடத்தின் அதன் தெற்காசிய பிராந்திய அயல் நாடுகளை விட சிறப்பான முறையில் முன்னேறி வருவதாகவும், கிழக்காசிய நாடுகளுடனான வித்தியாசத்தை பெருமளவில் குறைத்திருப்பதாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் உட்கட்டுமான அபிவிருத்தியில் தனியார்துறை கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றமை அவதானிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் உட்கட்டுமான அபிவிருத்தி வளர்ச்சிப் போக்கை காண்பித்து வரும் நிலைமையில் உயர்கல்வி மற்றும் தொழிலாளர் உரிமைகள் பயிற்சி நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் எதிர்மறையான போக்கினை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுன் பொருளாதார கட்டமைப்பு மாற்றங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுமானால் இலங்கையின் நிலை மேலும் உயர்வடையும் என்றும் வர்த்தக சம்மேளனம் எதிர்வுகூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: