செவ்வாய், 6 செப்டம்பர், 2011

கார்ப்பரேட் நிறுவனங்களால் தான்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது:திருவாரூரில் நல்லகண்ணு

திருவாரூர்:உள்ளாட்சித் தேர்தலில், இந்திய கம்யூ., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என, திருவாரூரில் நல்லகண்ணு தெரிவித்தார்.திருவாரூரில், இந்திய கம்யூ., மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகண்ணு, நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில், கடந்த 20 ஆண்டுகளில் ஊழல் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

இதனால், பொதுமக்களிடையே ஊழலுக்கு எதிரான குரல் வலுத்துள்ளது. அதனால் தான், அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும். அதில், பிரதமரையும் அவசியம் உட்படுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களால் தான், பெரிய அளவிலான ஊழல் ஏற்படுகிறது. இவற்றை கண்காணிக்க, குழு அமைக்க @வண்டும். ஊழலை அடிமட்டத்திலேயே ஒழிக்க @வண்டும்.தமிழக உள்ளாட்சித் தேர்தலில், இந்திய கம்யூ., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும்.

இதில், அதிக இடங்களை கேட்டுப் பெறும். இது தொடர்பான, மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு, பின், வரும் 10ம் @ததி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கூட்டத்தில், உரிய முடிவுகள் எடுக்கப்படும்.சட்டமன்றத்தில், இலங்கைத் தமிழர்கள் மற்றும் தூக்குத் தண்டனை கைதிகளுக்கு ஆதரவாக, தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திருவாரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: