செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

புயல் கடந்தவன் மீது புழுதி கொண்டு தூற்றி பயனில்லை.

யாழ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமனத்துக்காக
 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மனுக்கொடுத்துவிட்டு காத்திருந்தார். அவரிடம் மட்டுமல்ல, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஐன், மற்றும் அரசாங்க உயர் மட்ட தரப்பு என்று சகல தரப்பினருக்கும் தானே யாழ் கல்வி சமூகத்தை இரட்சிக்க வந்த மீட்பர் என்றும் கூறி வந்தார். ஐனநாயக முறைப்படி யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களாலும், சல்விச்சமூகத்தாலும் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்ட வசந்தியை ஓரம் கட்டி விட்டு தன்னை துணை வேந்தராக்கும் படி நியாத்தீர்ப்புக்கு மாறாக மான்றாட்டம் நடத்திக்கொண்டும் இருந்தார். அடிக்கடி அமைச்சருக்கு தொலை பேசி எடுத்தார், நேரில் சென்று தரிசனம் கொடுத்தார், கைகுலுக்கி கல கலத்து பேசி மகிந்தார்.
அமைச்ரை வெகுவாக புகழ்ந்து ஊடகங்களுக்கு செய்தியும் கொடுத்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் ஐனநாயக விருப்பங்களை ஏற்று ஐனாதிபதி இறுதித்தீர்மானம் எடுத்தார். துணை வேந்தர் பதவி நியாயப்படி வசந்திக்கு போய் சேர்ந்து விட்டது. கூலுக்கு ஆத்திரம் வந்து விட்டது. தனக்குத்தான் துணை வேந்தர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்த கூல் அதிர்ச்சியில் உறைந்தார்.
 துணை வேந்தர் பதவி நியமனம் யாருக்கு என்று தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர் புகழந்து பாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இப்போது ஆயுதக்குழுவின் தலைவர் என்கிறார், தேர்தல் முறை கேடு என்கிறார், இதிலும் மேலாக தமிழ் பெண்கள் சமூகத்தையும், அவர்களின் கலாச்சாரப்பண்புகளையும் இழிவு படுத்தும் பகையில் பெண்களை விற்பதாக தூற்றுதலும் நடத்திக்கொண்டிருக்கிறார்.
தமிழ் மாதர் குலம் கூலின் மீது கோபம் கொள்வதற்கு முன்பாக இந்த விவகாரகம் நீதி சட்டத்தின் முன்பாக தீர்ப்புக்கு விடப்பட்டது.
ஐனநாயக முறைப்படி நீதிச்சட்டத்தை நாடிய அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனாலும், நீதிச்சட்டத்திற்கு மதிப்பளிக்க மறுத்து கூல் மேற்குலகில் தஞ்சம் அடைந்ததுதான் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்க ராஜாங்க அமைச்சின் உள் வீட்டு விருந்தாளியான தான் வசந்தி என்ற ஒரு பெண்ணுக்கு கட்டுப்பட்டு பெண்ணின் கீழ் சேவை புரிவதா என்று தனது மேட்டுக்குடி சிந்தனையில் அவர் சுழன்றதெல்லாம் ஆச்சரியமான விடயமல்ல.
அவர் மேட்டுக்குடியானவர் அல்ல என்று அவருக்கு சிபார்சு வழங்கிய மேதாவிகளுக்கு மட்டுமே இது ஆச்சரியம். நீதிச்சட்டம் நன்மை விளைவிக்கும் தன்மையுடைது என்பதாலும், தானோ தீமை விளைவிப்பவன் என்பதாலும், பாவங்களுக்கு அடிமையாக விற்கப்பட்டவன் தானே என்பதாலும் தப்பியோடி வந்துவிட்டது இந்த சாத்தான்.
அமைச்சர் தேவானந்தா ஒழுங்கு விதிகளையும் மீறி கூலுக்கு துணை வேந்தர் பதவியை எடுத்து கொடுத்திருந்தால் மனுக்குலத்தை மீட்க வந்த இறை தூதன் தேவானந்தா என்று புகழ்ந்திருப்பார். பதவி மீது மோகங்கொண்ட இந்த சாத்தான் இப்போது என்ன சொல்கிறது?….தனக்கு முறை கேடான முறையில் பதவி வழங்காதவருக்கு சாவுதான் முடிவு என்று தூற்றுகிறது. இப்படி வன்மமும் வக்கிர புத்தியும் வைத்துக்கொண்டு வேதம் ஓதுகிறார் கல்விச்சமூகம் சீரழிந்து போகப்போகிறதாம் என்று… நாட்டை விட்டு படித்தவர்கள் எல்லோரும் தப்பித்து போய் விட்டார்களாம். உண்மைதான் அவர்கள் என்ன கூலைப்போல் பதவி கிடைக்கவில்லை என்ற வெப்பியாரத்திலா தப்பித்து வந்தார்கள்?… கல்விச்மூகத்திற்கு பணிகள் ஆற்ற வேண்டிய ஆசை கூலுக்கு இருந்திருந்தால்வசந்தியின் துணை வேந்தர் தலைமையை ஏற்று நின்று நன்றாக ஆற்றியிருக்லாமே.
தானே தமிழ் சமூகத்தின் தனிப்பெரும் கல்விமான் என்றும், தானே அதன் அடையாளம் என்றும் இந்த சாத்தான் கூறுவது அருவருப்பான கூற்றாகவே தெரிகிறது. பதவிக்காக ஒரு பேச்சும், பதவி கிடைக்கவில்லை என்று இன்னொரு பேச்சும் என்று வேசம் மாறிப்பேசுவதுதான் தமிழ் கல்விச்சமூகத்தின் அடையாளமா?… படித்தவர் கூல் என்றால் அவரது எண்ணங்களில் பரிசுத்தம் தெரியவில்லையே. பரீட்சையில் சித்தியடைய முடியாத மாணவன் மதிப்பீடுகளை வழங்கிய ஆசியரியரை நோக்கி கற்களை வீசி வன்முறை நடத்தினால் கூல் என்ற சாத்தான் அதை ஏற்குமா?…
அப்படி ஏற்கவில்லை என்றால் கூலாரே உமக்கு துணை வேந்தர் நியமனம் கிடைக்கவில்லை என்பதற்காக ஏன் கற்களை வீச வேண்டும்?….உரிய ஒழுங்கை மீறி தனக்கு நியமனம் வழங்கதவர்கள் மீது கூல் புழுதி வாரி தூற்றிக்கொண்டிருப்பது நியாயம் என்றால்…. பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களை ஆசரியர்கள் மீது வன்முறை நடத்துமாறும். தூண்டி விடலாம்.
இதுதானா கூல் காட்டும் கல்வி வழி?… இவர்தானா தமிழ் கல்விச்சமூகத்தின் அடையாளம்?… தூ!… வெட்கமில்லையா?….. அப்படி சொல்ல…. புயல் கடந்தவன் மீது புழுதி கொண்டு தூற்றி பயனில்லை.
இனிவரும் காலம் கனிதரும் காலம். நீதிச்சட்டம் மன்னிக்கிறதோ இல்லையோபுயல் கடந்தவனின் ஐனநாயக இராட்சியம் பாவிகளை இரட்சிப்பது போல் கூலையும் இரட்சிக்கும். சாத்தான் நிலையில் இருந்து பரிசுத்தமானவராக மனந்திருந்தி வாரும்.
இப்படிக்கு பண்டிதர்!

கருத்துகள் இல்லை: