வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ராமதாஸ்:அன்னா ஹசாரேயை யாரென்றே தெரியாது

சென்னை: ""அன்னா ஹசாரேயை யாரென்றே தெரியாது'' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். சென்னையில் நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில், ராமதாஸ் கூறியதாவது: மக்களுக்கு இலவசங்கள் வழங்க, தி.மு.க., ஆட்சியில் ஐந்தாண்டுகளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டனர். இந்த அ.தி.மு.க., ஆட்சியில், இலவசங்களுக்கு இவ்வாண்டு மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட உள்ளதாகக் கூறுகின்றனர். இலவசங்களைக் கொடுத்தே மக்களை மழுங்கடிக்கப் பார்க்கின்றனர். மது விற்பனை மூலம் 2002 - 2003ம் ஆண்டில், 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2011ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம், 17 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது குடிமக்களின் உயர்வைவிட "குடி'மகன்களின் வளர்ச்சியைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தில், திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு, பா.ம.க., மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. மக்கள் எங்களுக்கு பாவ மன்னிப்பு வழங்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, என் தலைமையில் டாஸ்மாக் கடை மூடும் போராட்டம் நடத்த உள்ளோம். என் மகன் அன்புமணிக்கு தகுதியும், திறமையும் இருந்ததால் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தகுதியில்லாமலே சிலரது வாரிசுகள் அரசியல் நடத்துகின்றனர். அன்னா ஹசாரேயை யாரென்று எனக்குத் தெரியாது. அவர் போராட்டம் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
2011-08-18 02:14:55 IST Report Abuse
உள்ளதை உள்ளபடியே நேர்மையாக பேசுபவர்தான் மருத்துவர் ஐயா, நடிகர் ரஜினியை நம் எல்லோருக்கும் பிறந்ததிலிருந்தே தெரியும். ஆனால் அண்ணா ஹசாறேவை ஆறுமாதத்துக்கு முன் கூட யாருக்கும் தெரியாது. அண்ணா ஹசாறேவுக்கு எதிரா கருத்து பதிவு செய்யக்கூடாதுன்னு எதிர்பாக்குறது ஜனநாயகம் இல்ல , அண்ணா ஹசாரே செய்யிறது ஜனநாயகத்தின் அடிப்படையை ஆட்டிப்பார்க்கும் செயல் , ஊழலே செய்யாத மருத்துவர் ஐயா அண்ணா ஹசாறேவை விமர்சிக்க தகுதியான ஆள்!
Durai annamalai - Trichy,இந்தியா
2011-08-18 05:38:23 IST Report Abuse
ஹை.....ஹை.....ஜாலிதான்.....இன்னிக்கு எனக்கு லீவு...கொத்து பரோட்டா கிடைச்சாச்சு.....டவுசர் தாஸ் பத்தின வாசகர் கமெண்ட படிச்சு வயிறு குலுங்க சிரிச்சு இன்றைக்கு டைம் பாஸ் பண்ணிடலாம்....ஹா....ஹா.....ஸ்டார்ட் மியூசிக்......ரம்பம்பம்...ஆரம்பம்.....ரம்பம்பம்...ஆரம்பம்...
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-08-18 05:08:15 IST Report Abuse
ஹசாரே அவர்களுக்கு என்ன நெஞ்சழுத்தம்..? எப்படி அவர் தன்னை இவரிடம் அறிமுகம் செய்து ஆசி வாங்காமல் போனார்? தோற்றாலும் "பட்ஜெட்" தயாரிக்கும் பணியில் உள்ள ஓர் கட்சியின் தலைவரிடம் அன்னா ஹசாரே அவர்கள் தன்னை அறிமுகம் செய்யாத காரணத்தால்தான் அவருக்கு இவ்வளவு பிரச்சினையுமே..!! இலவசங்களை இப்போது எதிர்கின்றார்..ஆனால் தேர்தல் பிரச்சாரத்திலே மஞ்ச துண்டார் அறிவித்த மிக்சி கிரைண்டர் பற்றி வானளாவ புகழ்ந்தார்..இப்போது சவுகரியமாய் மறந்துபோய் எதிர்க்கின்றார்..என்றால் அவ்வளவு "மன உறுதி" உள்ளவரிடம் அன்னா ஹசாரே அவர்கள் மரியாதை நிமித்தமாவது வந்து "வணங்கி" சென்றிருக்க வேண்டாமா? பேரன்களின் பெயரை தமிழில் வைக்காமல் தார் டின்னோடு தமிழ் அல்லாத விளம்பர் பலகைகளை அழித்தவரை..அன்னா ஹசாரே கூட வேண்டாம் அவரது குளுவினராவது இவரை வந்து பார்த்து பல்லிளித்து சென்றிருக்க வேண்டாமா...அப்படியெல்லாம் செய்யாத ஒருவரை "இவர்" ஏன் அவரை மதித்து தெரியும் என்று சொல்லவேண்டும்? நியாயம்தானே..? அவரை தெரியாது ஆனால் அவர் நடத்தும் போராட்டம் மட்டும் உள்நோக்கம் கொண்டது என்று தெரிகின்றது பாருங்கள்..அங்கேதான் "நிற்கின்றார்' இந்த இருபதாம் நூற்றாண்டு தமிழக "காந்தி"..! ராமதாஸ் காந்தி..!! ( மகாத்மா காந்தியை ஒப்பிட்டு சொல்லவில்லை..!! சோனியா, ராகுல் போன்ற வகையறா காந்தி போன்ற தகுதியில் உள்ளவர்களோடு ஒப்பிட்டேன்- தவறா? )

கருத்துகள் இல்லை: