புதன், 17 ஆகஸ்ட், 2011

திஹார்,அன்னாவை பார்க்க double ஸ்ரீ சாமியாருக்கு அனுமதி மறுப்பு

 
டெல்லி: வாழும் கலை அமைப்பின் நிர்வாகி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அன்னா ஹஸாரேவை சந்திக்க திஹார் சிறைக்கு சென்றார். ஆனால் அன்னாவை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

டெல்லி ஜேபி நரைன் பூங்காவில் நேற்று அன்னா ஹஸாரே தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அதிகாலையிலேயே கைது செய்யப்பட்டார். இதையடுத்து நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்தன. நாட்டின் அத்தனை மாநிலங்களிலும் ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன.

அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டும் அவர் சிறையை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே உள்ளார். ஜேபி நரைன் பூங்காவில் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நிபந்தனையற்ற அனுமதி தரப்பட வேண்டும் என்று அன்னா நிபந்தனை விதித்துள்ளார். அதை நிறைவேற்றாதவரை நான் சிறையிலிருந்து வெளியேற மாட்டேன் என்றும் அவர் கூறி விட்டார்.
இந்நிலையில் நேற்றிரவு வாழும் கலை அமைப்பின் நிர்வாகி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திஹார் சிறைக்கு சென்றார். ஆனால் அன்னா ஹஸாரேவை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு திஹார் சிறைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது,
நான் அன்னா ஹஸாரேவை சந்திக்கத் தான் வந்தேன் என்றார்.

ஹஸாரேவின் கைது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சுயநினைவோடு இருக்கும் யாரும் இந்த கைது நடவடிக்கையை சரி என்று சொல்வார்களா? என்று கேட்டார்.
ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அன்னா விவகராத்தில் இரட்டைப் பேச்சு பேசுவது சரியில்லை என்று குற்றம்சாட்டினார்

கருத்துகள் இல்லை: