கோடீஸ்வரர் ராஜரெட்ணம் வழக்கில் ஒலிநாடா உரையாடலை விசாரணை செய்ய அனுமதி: குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறை
பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கான நிதி நிறுவனமான கல்லியன் குழுமத்தின் ஸ்தாபகரும் கோடீஸ்வரருமான ராஜ் ராஜரெட்ணம் இரகசிய உரையாடல் பதிவுகளை நசுக்கி விடுவதற்கு மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டுள்ளதாகவும் அமெரிக்க சமஷ்டி நீதிமன்ற விசாரணையாளர்களுக்கு இது பாரிய வெற்றியெனவும் ராய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
பங்குப்பரிவர்த்தனையில் முன்கூட்டியே விடயங்களை அறிந்து கொள்வதில் மோசடியான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை இடம்பெற்று வருகிறது. உள்மட்ட வர்த்தக திட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் மோசடிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒலிநாடாக்களை விசாரணைக்கு வழக்கறிஞர்கள் பயன்படுத்துவதற்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் ஹோல்வெல் புதன்கிழமை அங்கீகாரமளித்திருக்கிறார்.
அதேசமயம் அந்த ஒலிநாடாக்கள் பழுதடையச் செய்யப்பட்டுள்ளவையென பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களையும் நீதிபதி நிராகரித்துள்ளார். இந்த ஒலிநாடாக்கள் 2 ஆயிரத்திற்கும்மேற்பட்ட உரையாடல்களைக் கொண்டுள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொலைபேசியூடாகவே அதிகளவுக்கு இடம்பெற்றுள்ளதாகவும் மரபு ரீதியான விதத்தில் விசாரணையாளர்கள் முழுமையாக விசாரணை நடத்துவது சாத்தியமில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார். 68 பக்கங்களில் நீதிபதி தனது அபிப்பிராயத்தை எழுதியிருக்கிறர்.
பணமுறி மோசடி ,சதி உட்பட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ராஜரெட்ணமும் மற்றொரு பிரதிவாதியுமான செய்திச்சேவையும் 20 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இதேவேளை, வர்த்தகர்கள், ஆலோசகர்கள், வங்கியாளர்கள் மீதான புதிய வழக்குகள் எதிர்வரும் வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த விசாரணையுடன் நன்கு பரீட்சயமான சட்டத்தரணிகள் பலர் தெரிவித்தனர்.
இலங்கையில் பிறந்தவரான ராஜரெட்ணம் 2007 அக்டோபரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் பங்குச்சந்தை காப்புநிதியத்தில் இடம்பெற்ற மோசடிகளில் இது பாரியதொன்றென சட்டத்தரணிகள் கூறுகின்றனர். ராஜரெட்ணமும் செய்ச்சியும் சட்ட விரோத வர்த்தகத்தின் மூலம் 53 மில்லியன் டொலரை இலாபமாக பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக