ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாளை பிரித்தானியவுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி பிரித்தானியவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி விசேட உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவ்விஜயத்தின் போது பல அரசியல் பிரமுகர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக