ஞாயிறு, 7 நவம்பர், 2010

லாட்ஜில் லாக்கான நந்தகி



Actress Nandhagi held up in Lodge)
திண்டுக்கல் பகுதிகளில் பத்து நாட்களாக நடந்து வருகிறது கலிங்கத்துபரணி ஷூட்டிங். நல்லாதானே போகுது என்று நம்பிக்கொண்டிருந்த படத்தின் நாயகி நந்தகிக்கு இன்றைக்கு வந்தது சோதனை. பெரிய பூட்டை எடுத்து வந்த லாட்ஜ்காரர்கள் பில்லை கட்டிட்டு வெளியில போங்க என்று கூறிவிட்டார்களாம். பில் கட்ட வேண்டியவர்கள் ஒருவரும் இல்லாததால் ஓவென்று நந்தகி அழ, நீ மட்டும் கிளம்பும்மா என்று இவரை மட்டும் அனுப்பிவிட்டு மற்றவர்களை லாக் பண்ணிவிட்டது லாட்ஜ் தரப்பு. இப்படத்தில் விமல், நந்தகி, வெளுத்துக்கட்டு பட நாயகி அருந்ததி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாகவே அருந்ததியையும் காணல. முக்கியமான இன்னும் சிலரையும் காணல. என்னவோ நடக்குதுன்னு நினைச்சிட்டு இருக்கும்போதே இப்படி ஒரு சிக்கல் என்கிறார் நந்தகி. சிக்கலை சரி செய்துவிட்டு சொல்லியனுப்புங்க. வர்றேன் என்று சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவருக்கு ஒரே ஒரு வருத்தம். அருந்ததி மட்டும் தப்பிச்சிட்டாரே என்றுதான்! 

கருத்துகள் இல்லை: