திங்கள், 2 ஆகஸ்ட், 2010

'மலையாள மனோரமா' ஆசிரியர் கே.எம்.மாத்யூ மரணம்

கோட்டயம்: மலையாள மனோரமா தலைமை எடிட்டர் கே.எம்.மாத்யூ தனது 93வது வயதில் கோட்டயத்தில் மரணமடைந்தார்.

இந்திய பத்திரிக்கை உலகின் முன்னோடிகளில் மாத்யூவும் ஒருவர். இன்று காலை தனது வீட்டில் அவர் மரணமடைந்தார்.

பிடிஐ எனப்படும் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்தவர் மாத்யூ. அவருக்கு மாமன் மாத்யூ, பிலிப் மாத்யூ, ஜேக்கப் மாத்யூ என மூன்று மகன்ளும், தங்கம் என்ற மகளும் உள்ளனர். அவரது மனைவி அன்னம்மா மாத்யூ ஏற்கனவே இறந்து விட்டார்.

மாத்யூவின் இறுதிச் சடங்குகள் நாளை புத்தன்பள்ளி சர்ச் கல்லறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  Read:  In English 
இந்தியாவின் முன்னணி நாளிதழான மலையாள மனோரமாவை உருவாக்கி வளர்த்தி பெருமை மாத்யூவுக்கு உண்டு. இவரது பொறுப்பில் மனோரமா வந்த பிறகே நாட்டின் முன்னணி நாளிதழ் என்ற சாதனையை அது பெற்றது.

மாத்யூ மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் [^], காங்கிரஸ் [^] தலைவர் சோனியா காந்தி [^], கேரள முதல்வர் [^] அச்சுதானந்தன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பதிவு செய்தவர்: vns
பதிவு செய்தது: 01 Aug 2010 4:37 pm
உண்மையான, எளிமையான அபூர்வமான மனிதர். யார் அவரைப்பார்க்க சென்றாலும் வயது வித்தியாசம் பாராது எழுந்து வந்து வழி அனுப்பும் பண்பை பெற்றவர். அவரது இழப்பு மலையாள பத்திரிக்கை உலகுக்கு மட்டுமல்ல, இந்திய பத்திரிகை துறைக்கே மிகப்பெரிய இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

கருத்துகள் இல்லை: