வியாழன், 5 ஆகஸ்ட், 2010

திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் அரசாங்கத்தில் இணைவு: பிரபா கணேசன் ஆளும் கட்சியில

திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் அரசாங்கத்தில் இணைவு: பிரபா கணேசன் ஆளும் கட்சியில் இணையவில்லை: ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக்கட்சியின் நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.ஜனாதிபதியை இன்று முற்பகல் அவர்கள் சந்தித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சிக்காக தாம் வாக்குகளை பெற்றுக்கொடுத்த போதும் அந்த கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதன் காரணமாகவே தாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாக திகாம்பரமும் தெரிவித்துள்ளனர்தமிழ் மக்களின் நலனினை கருத்திற் கொண்டே அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன் : பிரபா கணேசன்">
தமிழ் மக்களின் நலனினை கருத்திற் கொண்டே அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரி வித்துள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுங்கட்சியுடன் இணைந்ததன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை: